கொல்கத்தா ஜெயிச்சா விஜய் படமும் ஜெயிக்கும், 3வது ஒற்றுமையை கவனிச்சீங்களா! சம்பவத்துக்கு தயாரான கோட்

Vijay and KKR Team: இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக 40 நாட்கள் நடைபெற்ற நிலையில் கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி விட்டது. இதனால் கொல்கத்தா அணியின் ஓனர் ஷாருக்கான் அவருடைய அணி வீரர்களுக்கு நைட் விருந்து கொடுத்து பார்ட்டி வைத்திருக்கிறார். மேலும் இதுவரை மூன்று முறை KKR அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

அந்த வகையில் 2012, 2014 மற்றும் 2024 ஜெயித்திருக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் KKR அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுகிறதோ, அப்பொழுதெல்லாம் விஜய் படமும் திரையரங்கில் ரிலீஸ் ஆகி ஜெயித்திருக்கிறது.

கோட் படத்திற்கு நிச்சயம் வெற்றி

அதாவது 2012 ஆம் ஆண்டு KKR அணி வெற்றி பெற்ற பொழுது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படம் வணிகரீதியாக வெற்றி பெற்று சுமார் 121 கோடிக்கு மேல் லாபத்தை கொடுத்திருக்கிறது. அதே மாதிரி 2014 ஆம் ஆண்டு KKR அணி ஜெயித்த பொழுது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த வகையில் 70கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 128 கோடி வரை லாபத்தை வசூலித்து இருக்கிறது. இதே மாதிரி இந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு KKR அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. அதே மாதிரி தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படமும் சம்பவத்துக்கு தயாராகிவிட்டது.

2012 KKR Won
2014 KkR Won
2024 KKR Won

இந்த ஒற்றுமையின் அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் கோட் படத்துக்கு வெற்றி என்பது உறுதியாகிவிட்டது. இன்னும் ஒரு சில மாதங்களான செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து திரையரங்களிலும் கோட் படம் சம்பவம் செய்யப் போகிறது.

ஆனால் இதில் வெளிவந்த முதல் பாடல் கலவையான விமர்சனங்களை பெற்றதால் படம் எந்த அளவிற்கு ரசிகர்களை திருப்திப்படுத்தப் போகிறது என்று ஒரு சந்தேகமும் நிலவி வருகிறது. ஆனால் இதில் இன்னொரு விஷயம் லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகி அதிகமான பார்வையாளர்களை கவர்ந்தது. அப்படி என்றால் படம் வெளிவந்த பொழுது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்திருக்க வேண்டும்.

ஆனால் படம் கொஞ்சம் சொதப்பி ரசிகர்களை ஏமாற்றத்தை அடைய வைத்து விட்டது. அந்த வகையில் கோட் படத்தின் முதல் பாடல் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றாலும் படம் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு விஜய் கேரியரில் கத்தி மற்றும் துப்பாக்கி போல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

விஜய்யின் அடுத்த படத்திற்கான அப்டேட்

- Advertisement -