புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இப்ப புரியுதா அண்ணாச்சியோட பவர்.. விஜய், அஜித்தை தாண்டி முதல் இடத்தை பிடித்தாரா தி லெஜன்ட்.?

விஜய், அஜித் இருவரும் தான் தற்போது டாப் சினிமாவில் அதிக ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளனர். தங்களது படம் எப்படி இருந்தாலும் ரசிகர்களால் வெற்றி அடைய செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. அதுமட்டும்இன்றி தயாரிப்பாளர்களும் இதை நம்பி தான் கோடிக்கணக்கில் முதலீடு செய்து இவர்களின் படத்தை தயாரித்தார்கள்.

இந்நிலையில் அஜித், விஜய்யை பின்னுக்கு தள்ளி சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி முதலிடத்தை பிடித்துள்ளார். இது எல்லோருக்கும் ஆச்சரியமான விஷயமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை. அதாவது தி லெஜன்ட் படத்தின் மூலம் அண்ணாச்சி வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

Also Read : அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டாங்க.! விஜய்யை பார்த்து கூட திருந்தாத சிவகார்த்திகேயன், தனுஷ்

இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி அண்ணாச்சியை ட்ரோல் செய்வதற்காகவே படத்தை பார்த்து பெரிய அளவில் வெற்றி அடையச் செய்து விட்டார்கள். ஆனால் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு பிறகு தான் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

இதுவரை திரையரங்குகளில் வெளியான பின்பும் ஓடிடியில் வெளியாகியும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட படங்கள் என்றால் அது வாரிசு மற்றும் துணிவு தான். இந்த இரு படங்களையும் ஓடிடியிலும் ரசிகர்கள் பெருமளவில் பார்த்து முதல் இரண்டு இடங்களை பிடிக்க வைத்திருந்தனர்.

Also Read : 300 கோடி வசூல் செய்தும் விஜய்யை சந்தி சிரிக்க வைத்த தயாரிப்பாளர்.. இப்படியா அவமானப்படுத்துவது?

இப்போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான தி லெஜன்ட் படம் ஓடிடியில் ஐந்தாவது இடத்திலிருந்து தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளதாம். விஜய், அஜித்தையே அண்ணாச்சி இதன் மூலம் பின்னுக்கு தள்ளி உள்ளார். அதுமட்டுமின்றி ஹாட் ஸ்டாரில் லெஜன்ட் படம் மூலம் பல்லாயிரம் கணக்கான புது பார்வையாளர்கள் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இந்த படத்தை ரசிகர்கள் பிடித்து பார்த்து வருவதை காட்டிலும் காமெடி செய்வதற்காகத்தான் அதிக அளவில் பார்த்த வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மிக விரைவில் தி லெஜன்ட் அண்ணாச்சியின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Also Read : முத்தின பிறகு கடைதெருவுக்கு வந்த கத்திரிக்கா.. ஒரு வழியாக நினைத்ததை முடித்த லெஜன்ட் அண்ணாச்சி

- Advertisement -

Trending News