தளபதியாக மாற நினைக்கும் துருவ் விக்ரம்.. அதுக்கு விக்ரம் கூப்பிட்டது இந்த இயக்குனரை தான்

தளபதி விஜய், இயக்குனரின் மகனாக சினிமாவில் நுழைந்தாலும் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். இன்று அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது அவருடைய வாரிசு படத்தின் ரிலீஸுக்காக பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

விஜய்யை போல் விக்ரமும் தன்னுடைய கடின உழைப்பின் காரணமாக சினிமாவில் ஒரு நடிகராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருடைய மகனையும் தமிழ் சினிமாவில் விஜயின் இடத்தை பிடிக்க வைக்க வேண்டும் என போராடி வருகிறார். ஆனால் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை.

Also Read : தளபதி விஜய் விவாகரத்தா? கடுப்பில் லண்டன் சென்ற மனைவி சங்கீதா, வெளிவரப்போகும் அதிர்ச்சி தகவல்

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் மகான் படைத்தல் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த படமும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இவ்வாறு விக்ரம் பெரிய பெரிய இயக்குனர்கள் கையில் தனது மகனை ஒப்படைத்தாலும் ஒரு பயனும் இல்லை. ஆகையால் இப்போது பிரபல இயக்குனர் ஒருவரை நம்பி விக்ரம் தன்னுடைய மகன் துருவ் விக்ரமை ஒப்படைத்துள்ளார்.

அதாவது சமூகத்தின் மீது அக்கறை உள்ள படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் மாரி செல்வராஜ். மதம் மற்றும் ஜாதியால் மக்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை தனது படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தைரியமாக சொல்லக்கூடியவர். இவர் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கி உள்ளார்.

Also Read : கமல், விக்ரம், சிவாஜி அளவுக்கு தாக்குப் பிடிப்பாரா சூர்யா? வெறித்தனமாக இறங்கும் சிவாவின் படக்குழு

இப்போது உதயநிதியின் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் எடுக்கவிருக்கிறார். இந்த படத்தை விஜயின் கில்லி பட பாணியில் எடுக்கவிருக்கிறாராம். ஏனென்றால் விஜய்க்கு கில்லி படம் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது.

துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் படத்திற்காக தற்போது கபடி கற்று வருகிறாராம். அதுமட்டுமின்றி உடம்பையும் ஜிம்முக்கு போய் மெருகேற்றி உள்ளாராம். மேலும் இந்த படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Also Read : இப்படியும் நடிக்க முடியுமா என வியக்க வைத்த பகத் பாசிலின் 4 படங்கள்.. விக்ரம் அமரை மீண்டும் புக் செய்த கமல்

- Advertisement -