தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்.. லவ் டுடே, பிக் பாஸ் பிரபலம் இணையும் புது படத்தின் டைட்டில்

பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தன்னுடைய மனைவியுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் முதல் முதலாக தயாரிக்கும் தமிழ் படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது.

எல்.ஜி.எம் (Lets Get Married) என பெயரீட்டப்பட்டுள்ள இந்த புது படத்தில், பிக் பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும் லவ் டுடே படத்தின் பிரபலம் இவானா கதாநாயகியாகவும் நடிக்கிறார், இதில் நதியா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

Also Read: லவ் டுடே படத்தால் உச்சாணி கொம்புக்கு சென்ற இவானா.. விளம்பரத்தில் நடிக்க 4 கோடி சம்பளமா?

ஏற்கனவே தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக ரோர் ஆஃப் லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய மூன்று சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளார். இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு நேரடி தமிழ் படத்தை தயாரிக்க திட்டமிட்டு எல்.ஜி.எம் படத்தை துவங்கி உள்ளனர்.

அத்துடன் தோனி எப்போதுமே சென்னை மீது தீராத காதல் கொண்டவர். அப்படி இருக்கும்போது அவர் தயாரிப்பாளராக களம் இறங்கிய பின்பும் முதல் முதலாக தயாரிக்கும் எல்.ஜி.கே என்ற படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also Read: மணமேடையில் மனைவிக்கு முத்தமிட்ட ஹரிஷ் கல்யாண்.. இணையத்தை அலங்கரிக்கும் திருமண புகைப்படங்கள்

இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகளை விரைவில் படக்குழு துவங்க உள்ளது. சென்னையில் தோனியின் மனைவி படத்திற்கான பூஜையில் பங்கேற்ற படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு மாலை அணிவித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் இளம் நடிகர் ஹாரிஸ் கல்யாண் மற்றும் நடிகை இவானா இணைந்திருப்பது ரசிகர்களை மேலும் குஷிபடுத்தியுள்ளது. நிச்சயம் இந்த படமும் இந்த கால இளசுகள் விரும்பும் வகையில் இருக்கக்கூடிய காதல் கதை கொண்ட படமாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

LGM-cinemapettai
LGM-cinemapettai

Also Read: தளபதி வேண்டாம், பிக் பாஸ் நடிகர் போதும்.. திருமணத்திற்க்கு பின் ஹரிஷ் கல்யாணுக்கு அடித்த ஜாக்பாட்

Next Story

- Advertisement -