எந்த நடிகரும் இதுவரை செய்யாத காரியம்.. பிரம்மாண்ட ஹோட்டலில் கோடி கோடியாய் செலவு செய்த தனுஷ்

Actor Dhanush: தனுஷின் அசுர வளர்ச்சியை பார்த்து பொறாமை படாத நடிகர்களை இல்லை என்று சொல்லலாம். ஆனாலும் இதற்காக அவர் எடுத்த முயற்சி என்பது அதிகம் தான். மேலும் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் கூட சாதிக்க முடியாத பல விஷயங்களை தனுஷ் அக்கட தேசம் வரை சென்று சாதித்து காட்டியுள்ளார்.

ஆனால் இப்போது தனுஷின் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் ஓரம்கட்டி விட்டு சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் கேப்டன் மில்லர் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50வது படத்தை நடிக்க இருக்கிறார்.

Also Read : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத 5 படங்கள்.. தனுஷ் நடிப்பில் ரகுவரனாக மாற்றிய படம்

இந்த சூழலில் தனுஷ் திடீரென செய்த ஒரு காரியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதாவது தனது பள்ளியில் படித்த நண்பர்களை இப்போது சந்திக்க ஏற்பாடு செய்து இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் ஒரு நாள் முழுவதுமே அவர்களுடன் நேரத்தை தனுஷ் செலவிட்டு இருக்கிறார்.

இந்த சந்திப்பு சென்னையில் பிரபல ஹோட்டலான லீலா பேலஸில் தான் நடந்துள்ளது. மேலும் இந்த சந்திப்பிற்கு மட்டுமே பல கோடிகள் தனுஷ் செலவு செய்துள்ளாராம். இதுவரை எந்த நடிகர்களும் இப்படி ஒரு சந்திப்பை இவ்வளவு செலவு செய்து ஏற்பாடு செய்ததில்லை. மேலும் அந்த நிகழ்வில் தனுஷ் செய்தது எல்லாமே பிரம்மாண்டமாக இருந்துள்ளது.

Also Read : தனுஷிக்கு தம்பியாகும் கமலின் மகன்.. தடைபட்டு போன ஷூட்டிங், இணையும் பிரபல வில்லன்

திடீரென தனது பள்ளி நண்பர்களை சந்திக்க காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனையால் குழப்பத்தில் இருந்த தனுஷ் தன்னுடைய பள்ளி நண்பர்களை சந்தித்து நேரம் செலவிட நினைத்துள்ளார். அதை இப்போது செய்தும் இருக்கிறார்.

பொதுவாக ஹீரோக்கள் பெரிய நிலையை அடைந்தவுடன் வந்த பாதையையும் தன்னுடன் பயணித்தவர்களையும் மறந்து விடுவார்கள். ஆனால் இன்று தனுஷ் எட்ட முடியாத உயரத்தில் இருந்த போதும் இவ்வாறு செய்துள்ளது மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

Also Read : தெரியாத்தனமாக தனுஷுக்கு ரஜினி செய்த நல்லது.. ஜெயிலரால், கேப்டன் மில்லருக்கு எகிறும் கெடுபிடி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்