வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

17 வயதில் தனுஷ் மகன் செய்த காரியம்.. அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்

Actor Dhanush : தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இருவரும் கடந்த ஆண்டு பிரியப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர்.

ஆனாலும் தங்களது குழந்தைகளுக்கான நேரத்தை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் செலவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது மூத்த மகன் யாத்ரா போயஸ் கார்டனில் பைக்கில் சுற்றிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதில் சில விதிமுறை இருக்கிறது.

அதாவது 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே லைசன்ஸ் வாங்கிய பிறகு வாகனங்களை ஓட்ட வேண்டும். ஆனால் இப்போது 17 வயது நிரம்பிய யாத்ரா ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிய வீடியோ வெளியாகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி பூதாகரம் எடுக்க எல்லா ஊடகங்களிலும் போடப்பட்டது.

Also Read : ஒரே கல்லுல ரெண்டு மாங்காவை அடிக்கும் தனுஷ்.. மாமனார், பொண்டாட்டியை காலி செய்யும் மாஸ்டர் பிளான்

இதை அடுத்து தேனாம்பேட்டையில் உள்ள போக்குவரத்து துறை போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் விதிகளை மீறியதற்காக தனுஷின் மகன் யாத்திராவுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் என்பது தனுஷுக்கு பெரிய விஷயம் அல்ல என்ற ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் சாதாரணமாக இப்போது 18 வயது நிரம்பாத நிறைய குழந்தைகள் இரு சக்கர வாகனங்களில் செல்வதை காண முடிகிறது. இதுவே பிரபலங்களின் வாரிசுகளாக இருக்கும்போது எதிர்பாராமல் செய்யும் சில விஷயங்களும் சர்ச்சையாகி விடுகிறது. அதேபோல் தான் தனுஷ் விஷயத்திலும் அவரது மகன் பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் இவ்வாறு பிரச்சனையை சந்தித்திருக்கிறார்.

Also Read : தனுஷ் கைவசம் இருக்கும் 11 படங்கள்.. இசைஞானியாக அவதாரம் எடுக்கும் அசுரன்

- Advertisement -

Trending News