ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மனைவிக்கு சமாதான தூது விட்ட தனுஷ்.. கடும் கண்டிஷன் போட்ட ஐஸ்வர்யா

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த தாய் கிழவி பாடல் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதை அடுத்து அவரின் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தனுஷ் தற்போது தன்னுடைய பர்சனல் வாழ்க்கையில் சில முடிவுகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அவர் தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு மீடியாவில் அறிவித்தார்.

இப்படி ஒரு செய்தியை எதிர்பார்க்காத ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் தனுசுக்கு அறிவுரை கூறி வந்தனர். மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தரப்பில் இருந்தும் இவர்களை சேர்த்து வைக்க சமாதான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் தங்களுடைய முடிவில் உறுதியாக இருந்தனர்.

இந்நிலையில் தனுஷ் தற்போது மனமிறங்கி மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறாராம். சமீப காலமாக திரை வாழ்வில் அவர் சந்தித்து வரும் தொடர் சறுக்கல்கள் தான் தனுஷின் இந்த மன மாற்றத்திற்கு காரணம் என்று பேசப்பட்டு வருகிறது.

இதனால் அவர் தற்போது தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று சமாதான தூது விட்டு வருகிறாராம். எப்படியோ இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் சரி என்று குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருக்க, ஐஸ்வர்யாவோ தனுஷை நம்புவதற்கு தயாராக இல்லையாம்.

மேலும் இந்த விஷயத்தில் சற்று நிதானமாக யோசித்து முடிவு எடுக்க நினைக்கும் ஐஸ்வர்யா சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் தனுஷின் நடவடிக்கைகளை நன்றாக கவனித்து பார்த்த பிறகு தான் என்னுடைய முடிவை கூறுவேன் என்று கண்டிஷனாக சொல்லிவிட்டாராம்.

இதனால் தனுஷ் தற்போது மனைவியின் சம்மதத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவர்கள் இருவரும் இணைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், நவம்பர் மாதத்தில் வர இருக்கும் அவர்களின் திருமண நாள் அன்று முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் தனுஷின் பிறந்தநாள் வருகிறது. அன்று ஐஸ்வர்யாவின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை காண தனுஷின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

Trending News