அவதாருக்கே டஃப் கொடுக்க போகும் வெற்றிமாறன்.. உச்சகட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்த விடுதலை 2

Viduthalai 2: ஐந்து பாகங்களாக ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஹாலிவுட் படமான அவதார் படத்தின் இரண்டு பாகங்கள் இதுவரை வெளியாகி ரசிகர்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அப்படிப்பட்ட அவதாரத்தை கொடுக்கும் வகையில் வித்தியாசமாக யோசித்து செயல்பட்டு கொண்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதத்தில்வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. விடுதலை படம் இரண்டாம் பாகத்துக்கு வெறும் 20 நாள் இருந்தால் போதும் என வெற்றிமாறன் சொன்னார். முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகம் முக்காவாசி முடிந்தது என்று கூட கூறினார்.

Also Read: கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.. விஜய் சேதுபதியை வழிக்கு கொண்டு வந்த வெற்றிமாறன்

ஆனால் இப்பொழுது இன்னும் 100 நாட்கள் சூட்டிங் பாக்கி இருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் விடுதலை இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என போய்க்கொண்டே இருக்கும் என்பது தெரிகிறது. விடுதலை படத்தை வைத்து செம்மையாக பிளான் செய்து கொண்டிருக்கிறார் வெற்றிமாறன். அனேகமாக இது மூன்று நான்கு பாகங்களாக வெளி வந்தால் கூட ஆச்சரியமில்லை.

முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு எந்த ஜோடியையும் சேர்க்காத வெற்றிமாறன், 2ம் பாகத்தில் மலையாள குயின் மஞ்சு வாரியரை மக்கள் செல்வனுக்கு கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி மஞ்சு வாரியருடன் நடிக்க காத்திருந்த நிலையில், இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

Also Read: ஒரேடியாக அலைக்கழிக்கும் வெற்றிமாறன்.. புலிவாலை புடிச்சாச்சின்னு புலம்பித் தள்ளும் படக்குழு

விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஜோடியை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இவர்களுக்கிடையே வலுவான கதைக்களத்தை வெற்றிமாறன் இரண்டாம், மூன்றாம் பாகங்களில் உருவாக்கி வைத்திருக்கிறார். இதனால் முதல் பாகத்தை விட அதிக எதிர்பார்ப்பு இரண்டாம்  பாகத்தில் நிலவி வருகிறது.

இரண்டாம் பாகம் மட்டுமல்ல மூன்று, நான்கு என அடுத்தடுத்த பாகங்களுக்கு ரசிகர்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதைப் பார்த்து தொடர்ந்து விடுதலை சீரிஸ் வெளியாகப் போகிறது. அதற்காகத்தான் வெற்றிமாறன் இப்போது வெறிகொண்டு 100 நாட்கள் படப்பிடிப்பை தீவிரமாக நடத்தி வருகிறார்.

Also Read: வெற்றிமாறன் இயக்க உள்ள பயோபிக் படம்.. சவுக்கு சங்கராக நடிக்கும் ஹீரோ

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்