எக்ஸ் பொண்டாட்டிக்கு போட்டியாக இறங்கிய தனுஷ்.. லால் சலாம் படத்தில் ஏற்பட்ட சிக்கல்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி கடந்த ஆண்டில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இவர்கள் இருவரும் தற்போது தனித்தனியாக தங்களது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி படங்களிலும் பிஸியாக உள்ளனர்.

தமிழ், தெலுங்கு என தனுஷ் இரு முறைகளில் நடித்திருக்கும் வாத்தி படம் வருகின்ற 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷின் எக்ஸ் பொண்டாட்டியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read : அடுத்த நேஷனல் அவார்டை தட்டி தூக்க போகும் தனுஷ்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட பிரபலம்

அந்த வகையில் ரஜினி கேமியோ தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை லைக்கா தயாரிக்கிறது. மேலும் லால் சலாம் படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படுவதால் இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் போன்ற நடிகர்களை ஐஸ்வர்யா தேர்வு செய்திருந்தார்.

மேலும் படத்தின் போஸ்டரும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் காஸ்டியூம் டிசைனர் விலகிய நிலையில் மேலும் ஒரு முக்கிய பிரபலம் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதாவது லால் சலாம் படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷால் விலகி உள்ளாராம்.

Also Read : எனக்கு ஹீரோயின் சப்ஜெக்ட் தான் வேணும் .. மவுஸ் குறையாததால் அடம்பிடிக்கும் தனுஷ் பட ஹீரோயின்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு விஷ்ணு விஷால் விலகுவதற்கான காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது விஷ்ணு விஷால் விலகுவதற்கான காரணம் தனுஷ் தானாம்.

அதாவது தனுஷ் மீண்டும் படத்தை இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதனால் விஷ்ணு விஷாலை கதாநாயகனாக வைத்து அவர் ஒரு படம் இயக்கப் போகிறாராம். லால் சலாம் படப்பிடிப்பு நீண்ட காலம் எடுக்கப்படும் என்பதால் விஷ்ணு விஷால் அந்த படத்தில் இருந்து விலகி தனுஷ் படத்தில் நடிக்க உள்ளாராம்.

Also Read : தனுஷ் கேரியரை க்ளோஸ் பண்ணும்படி அமைந்த 5 படங்கள்.. வளரும் போதே வந்த சோதனை

Next Story

- Advertisement -