தனுஷ் படக் காட்சியை சுட்ட கன்னட திரைப்படம்.. 150 கோடி வசூலுக்கு இதுதான் காரணம்..

கன்னடத்தில் செப்டம்பர் மாதம் ரிலீசான காந்தார திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவான இப்படம் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டு பல பிரம்மாண்டமான காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

வெறும் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் வசூல் தற்போது மட்டுமே 150 கோடியை எட்டியுள்ளது. நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப்.திரைப்படத்தை தொடர்ந்து கன்னட சினிமாவில் குறுகிய காலத்தில் அதிக வசூலை குவித்து வரும் திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.

Also read: சிம்புவுடன் கூட்டணி போடும் தனுஷ்.. டைரக்டர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

இதனிடையே காந்தார திரைப்படத்தில் காட்டப்படும் காடுகளும் ,அந்த காட்டில் வசிக்கும் மக்கள் வணங்கும் பாஞ்சருளி கடவுளும் தத்ரூபமான காட்சிகளோடு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் தனுஷின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளை காந்தார திரைப்படத்தில் காப்பி செய்து படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி .

தமிழில் வெளியான கர்ணன் திரைப்படம் வெற்றியை பெற்றிருந்த நிலையில், அடிப்படை கதையாகவே தாழ்ந்த ஜாதியினரை உயர்ந்த ஜாதியினர் எப்படி நடத்துகிறார்கள் என்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.

Also read: சூப்பர் ஸ்டாரை சந்தோஷப்படுத்திய தனுஷ்.. பதிலுக்கு ரஜினி கொடுக்கும் சர்ப்ரைஸ்

அதேபோலவே காந்தார திரைப்படத்தின் கதை களமும் அமைந்துள்ளது. மேலும் கர்ணன் திரைப்படத்தில் பல முகமூடி கதாபாத்திரங்கள் அடங்கியிருக்கும். அதிலும் முக்கியமாக சாமி ஆடும் உருவத்தை கர்ணன் திரைப்படத்தில் காட்டியது போலவே காந்தார திரைப்படத்திலும் இயக்குனர் ரிஷப் செட்டி ஒரு காட்சியில் அமைத்துள்ளார்.

பொதுவாக கன்னட திரைப்படத்தில் எடுக்கப்படும் பல திரைப்படங்கள் நம் தமிழ் சினிமாவில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட திரைப்படங்களாகும். அந்த வகையில் தற்போது கே ஜி எஃப் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் காந்தார திரைப்படம் கன்னட சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: திரும்பத் திரும்ப மல்லுக்கட்டும் சிம்பு-தனுஷ்.. ஒரே போடாய் எஸ்டிஆர் கையில் எடுக்கும் புது ஆயுதம்

Next Story

- Advertisement -