பிக்பாஸ் பிரபலத்திற்கு வாய்ப்பு கொடுத்த தனுஷ்.. முட்டி மோதிக் கொள்ளும் சிவாங்கி

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கத்தில் இந்தப்படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நானே வருவேன் திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன.

தற்போது நானே வருவேன் படத்தில் சூப்பர் சிங்கர் பிக்பாஸில் பிரபலமான ஆஜித் நடித்துள்ளார். சமீபத்தில் ஆஜித் செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்

ஆனால் இப்படத்தில் ஆஜித்திற்கு பதிலாக சிவாங்கி நடித்திருப்பதாக இருந்தது. ஆனால் சிவாங்கி தொடர்ந்து பட வாய்ப்புகள் இருப்பதால் ஆஜித்திற்கு நானே வருவேன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாக சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான சிவாங்கி, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருப்பார். அந்தப் படத்திற்கு பிறகு ஒரு சில பட வாய்ப்புகளை பெற்று பிஸியாக இருக்கும் சிவாங்கிக்கு செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் பட வாய்ப்பு கை நழுவியது.

அந்த வாய்ப்பை கப்புனு பிடித்துக்கொண்ட சூப்பர் சிங்கர் ஆஜித், தனுஷின் நானே வருவேன் படத்தில் சிறிய கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார். இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு 100 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து விளையாடி ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.

அதுமட்டுமின்றி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சின்னத் திரையின் மூலம் தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு ஆஜித்துக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

aajith-cinemapettai1
aajith-cinemapettai