பணத்தாசையால் கேரியரை தொலைக்கும் 3 டாப் ஹீரோக்கள்.. வாரிசு விஜய்யின் லிஸ்டில் இணைந்த தனுஷ்

டஃப் நடிகர்களுள் ஒருவர் என்ற அந்தஸ்தை தனுஷ் தற்போது வரை தக்க வைத்துள்ளார். ஆனால் இனியும் அது நீடிக்குமா என்ற சந்தேகத்தை இப்போது வெளியாகியிருக்கும் வாத்தி பட ட்ரெய்லர் ஏற்படுத்தி உள்ளது. வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மற்றும் பலர் நடிப்பில் வாத்தி படம் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகியுள்ளது.

இந்த படம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தனுஷ் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ட்ரெய்லர் ஏமாற்றத்தை தந்துள்ளது. அதாவது இந்த படத்தில் தனுஷ், சமுத்திரக்கனி இன்னும் இரண்டு மூன்று கதாபாத்திரங்கள் தான் நன்கு தெரிந்த முகங்களாக உள்ளனர்.

Also Read : ஐஸ்வர்யாவுடன் ஒர்க் அவுட் செய்யும் நயன்தாராவின் எக்ஸ் காதலன்.. கொலவெறியில் தனுஷ்

மற்ற நடிகர்கள் எல்லாமே தெலுங்கு சினிமாவைச் சேர்ந்தவர்கள் என்பது நன்கு தெரிகிறது. மேலும் படத்தின் கதை மற்றும் வசனம் எல்லாமே பழையபடி தான் உள்ளது. மொத்தத்தில் வாத்தி படம் அரைச்ச மாவையே அரைத்துள்ளார்கள் என்பது ட்ரெய்லரில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதுமட்டுமின்றி படத்தில் சாதாரண இலை, கொடி முதல் அனைத்துமே செட்டு போட்டு செய்துள்ளார்கள்.

ஆகையால் எல்லாமே இயற்கையாக இல்லாமல் செயற்கையாக கொண்டு வந்துள்ளார்கள். வாத்தி படத்தில் எண்ணற்ற குறைகள் உள்ளடங்கியுள்ளது. மேலும் முழுக்க முழுக்க தெலுங்கு வாடையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் மட்டுமே வெளியிட்டு இருக்கலாம். தேவையில்லாமல் தமிழிலும் வெளியாகி தனுஷின் மார்க்கெட் சரியா உள்ளது.

Also Read : அங்க போறீங்களா என வெற்றிமாறனுடன் மல்லு கட்டிய தனுஷ்.. வேறு வழி இல்லாமல் தொடங்கும் 2-ம் பாகம்

இதேபோல் தான் தெலுங்கு இயக்குனர்களை நம்பி போன சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்க்கு மிகப்பெரிய சறுக்களை ஏற்படுத்தியிருந்தது. அதாவது சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்தது. அதேபோல் தான் விஜய்யின் வாரிசு படத்திலும் ஒரே ஒரு வீட்டை வைத்து முழு கதையையும் எடுத்திருந்தார்கள்.

இப்போது இந்த லிஸ்டில் தனுஷும் சேர்ந்துள்ளார். மற்ற மொழி படங்களில் தமிழில் உள்ள டாப் ஹீரோக்கள் நடித்தால் நிறைய சம்பளம் கொடுக்கிறார்கள் என்ற ஆசையில் அங்கு சென்று நடிக்கிறார்கள். ஆனால் படம் வெளியான பின்பு கடைசியில் அவர்களது மார்க்கெட் பறிபோகும் அளவிற்கு மோசமாகி விடுகிறது. மேலும் தனுஷ் இப்போதும் சுதாகரித்துக் கொள்ளவில்லை என்றால் அவரது கேரியர் அவ்வளவு தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

Also Read : வலுக்கட்டாயமாக லிப் லாக் சீனில் நடித்த 3 நடிகைகள்.. எதிர்பாராமல் வச்சு செய்த தனுஷ்

Next Story

- Advertisement -