தனுஷ், ஐஸ்வர்யா கொடுக்கும் ட்விஸ்ட்.. சந்தோஷமான செய்தியை அறிவிக்கப் போகும் அந்த நாள்

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த சில வருடங்கள் நடந்து வந்த பிரச்சினை காரணமாக ஜனவரி மாதம் 17ஆம் தேதி நள்ளிரவில் பிரிவதாக அறிவித்தனர். இருவரும் ஆந்திராவில் உள்ள ஒரே ஓட்டலில் இருந்து கொண்டு தனித்தனியாக அறிக்கை வெளியிட்டனர். பின்னர் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

குடும்பத்தினர் சொல்வதைக் கேட்காமல் தனுஷ் ஐஸ்வர்யா இருந்தனர். ஆனால் இரண்டு குடும்பத்தினர் இருவரையும் இணைத்து வைக்கும் முயற்சியில் இறங்கினார்கள். ஆந்திராவில் இருந்து சென்னை வரும் பொழுது சேர்ந்து ஜோடியாக வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் ஆனால் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில். ஐஸ்வர்யா இயக்குனர் அவதாரம் எடுத்தார் பிஸியாக மாறினார். தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படம் படுதோல்வியடைந்தது. மேலும் சினிமாவில் மிகப்பெரிய சரிவை சந்தித்த தனுஷ். இதில் பின்னர் ஐஸ்வர்யா, ரஜினிகாந்த் ஆகியோரை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை.

தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த கணவர் தனுஷ் என்ற பெயரை நீக்கினார் ஐஸ்வர்யா இந்த சம்பவத்திற்குப் பிறகு இருவரும் இனிமேல் இணைய வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளிவந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் மீண்டும் அனிருத் உதவியுடன்  ஐஸ்வர்யாவை சந்தித்தார் தனுஷ்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சமரசம் ஏற்பட்டு சென்னையில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக சந்தித்து வாழ்ந்து வந்தனர். ஒருவருக்கொருவர் சமாதானம் செய்து மீண்டும் ரகசியமாக இணைந்ததை இருவரும் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஜூலை 28 தேதி தனுஷ் பிறந்த நாளன்று இருவரும் இணைந்ததை ஒன்றாக கொண்டாடி உலகத்திற்கு தெரியப்படுத்த இருப்பதாக தகவல் வந்துள்ளது.  திருப்பதியில் வழிபாடு நடத்தி நாங்கள் மீண்டும் இணைந்து விட்டோம் என்பதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்துங்கள் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Next Story

- Advertisement -