இளையராஜாவின் பயோபிக் கதையை சொதப்பும் தனுஷ்.. கங்கை அமரனை அலட்சியம் செய்த சுள்ளான்

Dhanush: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கேப்டன் மில்லர் மற்றும் கடந்த ஆண்டு வெளிவந்த வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை அடுத்து வரக்கூடிய படம் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் தனுஷ் அவருடைய ஐம்பதாவது படமான ரயான் படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார்.

இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆகவேண்டும் என்று படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதே மாதிரி அடுத்து குபேரா என்ற படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மூன்று மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

இதற்கு இடையில் இளையராஜாவின் பயோபிக் கதையை மையமாக வைத்து இசைஞானி போல் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தை கேப்டன் மில்லர் படத்தை எடுத்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் இயக்குகிறார். அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் மற்றும் இவருடைய உதவி இயக்குனரிடம் தனுஷ் இப்படத்தின் கதை கலந்தாய்வு பற்றி பேசிக் கொண்டு வருகிறார்.

தேவையில்லாத ஆணியே பிடுங்கும் தனுஷ்

ஆனால் இந்த படத்திற்கு இது தேவையே இல்லாத ஒரு விஷயம். ஏனென்றால் இந்த பயோபிக் கதையை பொருத்தவரை இளையராஜாவை பற்றி யாருக்கு நன்றாக தெரியுமோ அவர்களிடம் கூட்டணி வைத்து படத்தை எடுத்தால் மட்டும் தான் வெற்றி பெற வைக்க முடியும்.

அதை விட்டுவிட்டு இப்ப புதுசாக முளைத்திருக்கும் இயக்குனர் அருண் மாதேஸ்வரனை வைத்து பண்ணுவது தேவையில்லாத ஆணியை புடுங்குவது போல் தெரிகிறது. அதற்கு பதிலாக அந்தக் காலத்தில் இருந்து இளையராஜாவிடம் நெருங்கி பழகியவர்கள் அல்லது கங்கை அமரன் போன்றவர்களிடம் தான் இப்படத்திற்கான கதையை டிஸ்கஸ் பண்ணி இருக்க வேண்டும்.

ஏனென்றால் இவர்களுக்கு மட்டும் தான் இளையராஜாவை பற்றி நன்றாக தெரியும். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தனுஷ் இப்படி செய்வது இளையராஜாவின் பயோபிக் கதையை சொதப்புவது போல் தெரிகிறது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்