சில வருடங்களாக தனுஷை சுற்றி பல பிரச்சனைகள் வந்தது. அதிலும் முக்கியமாக அவரது திருமண வாழ்க்கை விவாகரத்து, அவர் நடித்த தொடர் படங்களின் தோல்வி என தனுஷின் கேரியர் மூழ்கிப்போகும் அளவிற்கு இருந்தது. இதனிடையே கடந்த வருடம் ரிலீசான திருச்சிற்றம்பலம் திரைப்படம் தனுஷின் கேரியரை தூக்கி நிறுத்தியது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் தெலுங்கு,தமிழ் என இரு மொழிகளில் எடுக்கப்பட்டு ரிலீசானது. இப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வெற்றியை அடைந்த நிலையில், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இத்திரைப்படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Also Read: விசாரணையை ஐஸ்வர்யா பக்கம் திருப்பிய போலீஸ்.. தனுஷ், ரஜினி வீட்டிலும் கைவரிசை?.
நடிகை பிரியங்கா மோகன் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில், இப்படத்தை ஷூட்டிங் எடுக்க ஆரம்பித்ததிலிருந்து பல பிரச்சனைகள் நிலவி வந்தது. சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படம், அண்மையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள காலகட் மூடுந்துறை டைகர் ரிசர்வ் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இதனிடையே இந்த பகுதியில் மிருகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஷூட்டிங் எடுக்கப்படுவதாக சில கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இப்படத்தின் படப்பிடிப்பு காடு பகுதியில் எடுக்கப்படாமல், தனியார் நிலத்திலேயே செட்டமைத்து நடத்தி வருவதாக விளக்கம் கூறினார்.
Also Read: லீக் ஆனது கேப்டன் மில்லர் படத்தின் போர்க்காட்சிகள்.. அப்செட்டில் தனுஷ் செய்த வேலை
சினிமாக்காரர்கள் என்பதால் பணம் பிடுங்கும் வகையில் இதுப்போன்று சம்பவங்கள் நடைபெறுவதாகவும் சர்ச்சையானது. தற்போது இந்த பிரச்சனை எல்லாம் நிறைவுற்ற நிலையில், மீண்டும் இப்படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தாண்டு தீபாவளிக்கு இப்படம் திரையில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்திற்கான அப்டேட் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட உள்ளனர். அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் இரண்டாவது வாரம் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நடிகர் தனுஷ் தற்போது பெருமூச்சு விட்டு வருகிறார். தொடர்ந்து தனுஷ் கையில் பல படங்கள் உள்ள நிலையில் இப்படத்தை முடித்து விட்டு இயக்குனர் அவதாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
Also Read: கவின் முக்கியமல்ல, தனுஷ் தான் முக்கியம்.. சுயநலமாக பேசிய அப்பாவை லாக் செய்த அனிருத்