சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

தனுஷின் ஹாலிவுட் கனவு பலித்ததா.! தி கிரே மேன் எப்படி இருக்கு?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷின் நடிப்பில் தற்போது தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் தனுசுக்கு வெற்றியை கொடுத்ததா என்பதை சற்று விரிவாக காண்போம்.

ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ரேயான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், தனுஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். கதைப்படி ரேயான் கோஸ்லிங் சி ஐ ஏ வேலை ஒன்றுக்காக ஜெயிலில் இருந்து வரவழைக்கப்படுகிறார்

அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட வேலைகள் முடியும் தருவாயில் சில அதிர்ச்சியான தகவல்களும், அதற்கான ஆதாரங்களும் அவர் கைவசம் சிக்குகிறது. இதை தெரிந்து கொண்ட எதிராளிகள் அவரை கொலை செய்வதற்காக விரட்டுகிறார்கள். அதில் இருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதுதான் படத்தின் கதை.

படத்தில் ஆச்சரியப்படுத்தும் சண்டை காட்சிகளும், சில சஸ்பென்ஸ் காட்சிகளும் நன்றாக இருக்கிறது. ஆனால் வழக்கமாக இருக்கும் ஹாலிவுட் திரைப்படங்களைப் போன்று இந்த படமும் இருப்பதால் பெரிய அளவில் சுவாரஸ்யம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

இருப்பினும் சிறிது நேரம் மட்டுமே வரும் தனுஷ் இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் நடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அந்த அளவுக்கு ஒரு முக்கியமான ரோலை ஏற்று நடித்திருக்கும் தனுஷ் தன்னுடைய வழக்கமான நடிப்பால் கலக்கியிருக்கிறார்.

அந்த வகையில் அவருக்கு ஹாலிவுட்டில் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் படத்திற்கு ஆக்சன் மற்றும் இசை பக்க பலமாக இருந்தாலும் சில இடங்களில் தொய்வு ஏற்படுவது நன்றாகவே தெரிகிறது. அதனால் இப்படத்தை தனுஷுக்காக ஒரு முறை பார்க்கலாம்.

- Advertisement -

Trending News