மனிதாபிமான செத்துப் போச்சு, ஏர்போர்ட்டில் ரசிகருக்கு நடந்த கொடுமை.. நாகார்ஜுனாகு வலுக்கும் எதிர்ப்பு

Dhanush: நடிகர்களை நடிகர்களாக மட்டும் பாருங்கள் என்று எத்தனை பேர் வந்து சொன்னாலும் சாமானிய மக்களுக்கு புரியாது. ஏதாவது ஒரு நடிகர்கள் அல்லது நடிகைகளை நேரில் பார்த்தால் அவர்களிடம் பேச வேண்டும், அவர்களை தொட்டுப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஒரு சிலருக்கு ஆசை வரத்தான் செய்கிறது.

இவர்கள் கொடுக்கும் இந்த அளவு ஹைப் தான் இந்த நடிகர்களின் சம்பளத்தையும், பட வாய்ப்புகளையும் நிர்ணயிக்கிறது. ஆனால் மக்களால் தான் நாம் இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை நடிகர்கள் சில நேரங்களில் மறந்து விடுகிறார்கள்.

அப்படி தனுஷ் மற்றும் நாகார்ஜுனா சமீபத்தில் செய்த சம்பவம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஒரு ஏர்போர்ட்டில் நாகார்ஜுனா, தனுஷ் மற்றும் அவருடைய மகன்கள் வெளியே நடந்து வருகிறார்கள்.

அப்போது அந்த ஏர்போர்ட்டில் வேலை செய்யும் முதியவர் ஒருவர் நாகார்ஜுனாவை தொட முயற்சிக்கிறார். அவரை பவுன்சர் வேகமாக இழுக்க அந்த முதியவர் கீழே விழுகிறார். இத்தனைக்கும் அவர் ஊனமுற்றவர் என்று நெட்டில் நிறைய பேர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

உங்களையும் ஹீரோன்னு இன்னும் நம்புறாங்களே!

இந்த சம்பவத்தை நடிகர் தனுஷ் பார்த்தும் பார்க்காதது போல் வேகமாக நடந்து போகிறார். இந்த வீடியோ வைரலானதும் தனுஷ்க்கு முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்த நாகார்ஜுனா தனக்கு பின்னால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாது என்று அறிவிப்பு வெளியிடுகிறார்.

நாகார்ஜுனா இப்படி ஒரு காரணத்தை சொல்லி எஸ்கேப் ஆகி விடுவார் ஆனால் சம்பவத்தை நேருக்கு நேர் பார்த்த தனுஷ் இது பற்றி என்ன சொல்லி சமாளிக்க போகிறார் என்று தெரியவில்லை நடிகர்கள் என்பதை தாண்டி கொஞ்சம் மனிதாபிமானத்தோடு இவர்கள் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தனுஷ்

Next Story

- Advertisement -