தனியா வந்தா தல மட்டும் உருளும், படையா வந்தா சவமலை குவியும்.. வெறியேத்தும் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள்

Captain Miller First Single: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் நடிப்பில் கேப்டன் மில்லர் உருவாகி இருக்கிறது. அடுத்த வருடம் வெளியாக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இப்போது ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது.

அதற்காகவே காத்திருந்த தனுஷ் ரசிகர்கள் இப்போது இதை ஃபயர் விட்டு கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு பாடலின் ஒவ்வொரு வரிகளும் வெறித்தனமாக இருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷின் குரலில் உருவாகி இருக்கும் இந்த கில்லர் கில்லர் பாடலை கபீர் வாசுகி எழுதியுள்ளார்.

Also read: தனுசுக்கு வரிசை கட்டி நிற்கும் 5 படங்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

பாடலின் தொடக்கத்திலேயே நீங்கள் டெவில் இருப்பதை நம்புகிறீர்கள் என்றால் நான் தான் டெவில். ஆனால் நீங்கள் கேப்டன் மில்லர் என்று அழைப்பீர்கள் என தனுஷின் குரலோடு ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும் படையா வந்தா சவமலை குவியும்.

நீ நரியா பதுங்க ரோமம் கிழியும் நீ எருவா பாய கொம்பு முறியும். நீ ஓடி வந்தா முட்டி சிதறும் கூடி வந்தா பல்லு உதிரும் என இருக்கும் வரிகள் கேப்டன் மில்லரின் ஆக்ரோசத்தை காட்டுகிறது. அதிலும் தனுஷ் கையில் துப்பாக்கி, கோடாரி என பல ஆயுதங்களோடு வெறித்தனமாக வேட்டையாடுவது நிச்சயம் ரசிகர்களுக்கான சர்ப்ரைஸ் தான்.

Also read: 17 வயதில் தனுஷ் மகன் செய்த காரியம்.. அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்

அந்த வகையில் டிசம்பர் மாதம் வந்திருக்க வேண்டிய இந்த கேப்டன் மில்லர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. அந்த ரேஸில் அயலான், லால் சலாம் ஆகிய படங்களும் வர இருப்பதால் எது நம்பர் ஒன் இடத்தை தட்டிப் பறிக்கும் என்ற ஆவல் இப்போதே ஏற்பட்டுள்ளது.