திரும்பவும் முதலில் இருந்தா.. கையெடுத்து கும்பிட்டு தெரித்து ஓடும் தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து இன்று ஹிந்தி தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பு தவிர இயக்கம், தயாரிப்பு, பாட்டு என்று அனைத்து துறையிலும் தன் திறமையை காட்டி வருகிறார்.

நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர நடிகர் தனுசுக்கு சொந்தமாக ஒண்டெர் பார் என்ற தயாரிப்பு நிறுவனமும் இருக்கிறது. அதில் அவர் நடித்த 3 என்ற திரைப்படத்தை முதன்முதலாக தயாரித்து வெளியிட்டார்.

அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, விசாரணை உள்ளிட்ட பல திரைப்படங்களை அவர் தயாரித்துள்ளார். ஆனால் சமீபகாலமாக அவர் தயாரித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவி அவருக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் போனது. இதனால் இந்தப் படத்தை தயாரித்த தனுஷிற்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் அவர் சிறிது காலம் தயாரிப்பு பணிகளை நிறுத்தி விட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் தற்போது இயக்குனர்கள் பலரும் தனுசை சொந்தப்படம் எடுக்க சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்.

பிரபல இயக்குனர்கள் கூட தனுஷின் தயாரிப்பில் படம் இயக்குவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் தனுஷ் இப்போதைக்கு படம் தயாரிப்பது இல்லை என்று முடிவெடுத்துள்ளார். இது தவிர அவருக்கு ஹாலிவுட், பாலிவுட் மொழிகளில் வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் தற்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை