சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

உன் மாமாவுக்கே நான்தான் நடிப்பு சொல்லிக் கொடுத்தேன்.. தனுஷால் கலவரமான சூட்டிங் ஸ்பாட்

பிரபல காமெடி நடிகருக்கு(நேசமணி) திரையுலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் இவரின் வசனங்கள் இப்போதும் கூட சோசியல் மீடியாவில் வெகு பிரபலமாக இருக்கிறது.

இப்படி எந்த அளவுக்கு இவருக்கு புகழ் இருக்கிறதோ அதேபோன்று எப்போதும் சில சர்ச்சைகள் இவரை சுற்றிக் கொண்டே இருக்கும். அதன் காரணமாகவே திரைத்துறையில் இவர் மீது ஏகப்பட்ட புகார்களும் இருக்கிறது. அஜித் உட்பட பல பிரபலங்களுடன் இவருக்கு நிறைய மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் இவர் தனுசுடன் இணைந்து படிக்காதவன் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இனிமேல் தனுசுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று இவர் வெளியேறினார். அதன் பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் விவேக் நடித்தார்.

அப்படி அவர்களுக்குள் என்னதான் பிரச்சனை நடந்தது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது வடிவேலு படிக்காதவன் சூட்டிங் ஸ்பாட்டில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காட்சிக்கு ஏகப்பட்ட டேக்குகள் வாங்கி இருக்கிறார். ஆனாலும் இயக்குனர் பொறுமையாக அந்த காட்சிகளை படமாக்கி கொண்டிருந்தாராம்.

அப்படி இருந்தும் கூட வடிவேலு நேரத்தை கடத்தி இருக்கிறார். இதனால் கடுப்பான இயக்குனர் கேமராமேனிடம் சீக்கிரம் சூட் செய்யுங்கள், அவருக்கு நிமிஷத்திற்கு நிமிஷம் சம்பளம் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

வடிவேலு ஒரு படத்திற்கு மொத்தமாக சம்பளம் வாங்காமல் நாள் கணக்கின்படி சம்பளம் பெறுவது அனைவருக்கும் தெரியும். அதை இயக்குனர் வெளிப்படையாக கூறியதும் வடிவேலு கோபமடைந்திருக்கிறார். அந்த சமயத்தில் தனுஷும் அண்ணே, டைரக்டர் சொல்றபடி கேட்டு நடங்க என்று கூறி இருக்கிறார்.

இதுதான் வடிவேலுவை உச்சகட்ட கோபத்திற்கு ஆளாகியிருக்கிறது. ஏனென்றால் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கும் எந்த நடிகரும் அவருக்கு அறிவுரை கூற மாட்டார்களாம். ஆனால் தனுஷ் இப்படி கூறியது அவரின் ஈகோவை தூண்டி இருக்கிறது.

இதனால் தனுஷை கடுமையாக முறைத்த வடிவேலு பேக்கப் சொன்னதும் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அதன் பின்பு அவர் தனுஷை சந்தித்து கடுமையாக விவாதம் செய்திருக்கிறார். சந்திரமுகி படத்தில் உன் மாமாவுக்கே நான் தான் நடிப்பு சொல்லிக் கொடுத்தேன், நீ எனக்கு அட்வைஸ் பண்றியா என்று பயங்கர சண்டை போட்டிருக்கிறார்.

அதன் பிறகு தான் அவர் இனிமேல் தனுசுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று அந்த படத்திலிருந்து வெளியேறினாராம். வடிவேலு குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் வெளிவந்திருந்தாலும் படிக்காதவன் திரைப்படத்தில் அவர் தனுஷை அவமதித்தது அப்போது திரையுலகில் சிறு அதிர்வலையையும் ஏற்படுத்தியது.

- Advertisement -

Trending News