மாமனார் வழியில் போறதெல்லாம் சும்மா நடிப்புதான்.. உத்தமன் வேஷம் போடும் தனுஷின் அக்கப்போர்

Actor Dhanush: தனுஷ் ஆரம்பத்தில் சாதாரணமான ஒரு நடிகராக வந்திருந்தாலும், ரஜினியின் மருமகனாக எப்போது ஆனாரோ அப்பொழுதே இவருடைய முழு தோற்றத்தையும் மாற்றிக் கொண்டு அடக்கமான ஒரு ஹீரோவாக மாறிவிட்டார். தன்னுடைய பேச்சு, பாவனை, உடை அனைத்தையும் ரஜினியை ஃபாலோ பண்ணி பார்ப்பதற்கு ஒரு நல்ல மருமகன் மற்றும் கதாநாயகன் என்று சொல்லும் அளவிற்கு நடந்து கொண்டார்.

அந்த வகையில் ரஜினி கொள்கை அனைத்தையும் கடைப்பிடித்து எங்கே போனாலும் எளிமை என்று சுற்றித்திரிந்தார் தனுஷ். அப்படிப்பட்ட இவர் சமீப காலமாக ரஜினியிடம் இருந்த கருத்து வேறுபாட்டினால் சற்றே தள்ளி வந்து விட்டார். அதிலிருந்து இப்பொழுது வரை இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.

Also read: சிவகார்த்திகேயன், தனுஷ் ஹிட் லிஸ்டில் சேர்ந்த சூரி.. கருடனாக புதிய அவதாரம் ஜெயிக்குமா?

அதாவது ரஜினி தொட்டிருக்கும் உச்சத்தை யாராலையும் தொட்டுப் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு படிப்படியாக தன்னை செதுக்கிக்கொண்டு சூப்பர் ஸ்டார் ஆகவும், ஆன்மீக வழியையும் மேற்கொண்டு அமைதியாக வாழ்க்கையை நடத்தி வருகிறார். அப்படிப்பட்ட இவரின் மருமகன் தற்போது எல்லா வழிகளிலும் பிரச்சனையை தேடிக் கொண்டு போகிறார்.

அதாவது தனுஷுக்கு சூட்டிங் இருக்கிறது என்றால் சரியான நேரத்தில் வராமல், இவர் இஷ்டப்படி தான் படப்பிடிப்புக்கு வருகிறாராம். வந்தாலும் பெரிய ஹீரோக்கள் மற்றும் சீனியர் ஆர்டிஸ்ட்கள் யாரையும் மதிக்காமல் அவர்களை ரொம்ப நேரம் காக்க வைப்பது, அலட்சியப்படுத்துவது என இவர் மீது ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் வருகிறது.

Also read: பண்பு தவறாத மனிதரை வில்லனாக நடிக்க கூப்பிட்ட தனுஷ்.. உன் சகவாசமே வேணானு தலைத்தெறிக்க ஓடிய கானா புகழ்

அத்துடன் இவர் படப்பிடிப்புக்கு வந்த போது சிலர் இவரை கண்டு கொள்ளவில்லை என்ற ஒரு அற்ப விஷயத்திற்காக சண்ட போட்டு கோபத்துடன் சூட்டிங்கை விட்டு வெளியேறி இருக்கிறார். மாமனாரிடம் ஒட்டிக்கொண்ட பொழுது நல்ல பையன் மாதிரி நடித்துவிட்டு, தற்போது தான் இவருடைய சுயரூபமே தெரிகிறது என்பது போல் பல அக்கப்போர் விஷயங்களை செய்து வருகிறார்.

இதுல வேற மாமனார் கொள்கையை கடைப்பிடிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வருவதெல்லாம் அனைத்தும் நடிப்புதான். வெளி தோற்றத்தில் பார்க்க தான் உத்தமவேஷம், ஆனால் செய்வது அனைத்தும் பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஓவராக ஆட்டிட்யூட் காட்டுகிறார். இதனால் சேர்த்து வைத்த கொஞ்சம் நெஞ்ச பெயரையும் டேமேஜ் ஆக்கிக் கொண்டு வருகிறார்.

Also read: தாத்தா சாயலில் இருக்கும் தனுஷ் மகன் யாத்ரா.. அப்பா, அம்மாவை மிஞ்சிய உயரம், வைரலாகும் ஃபோட்டோ

- Advertisement -