18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்ட தனுஷ், ஐஸ்வர்யா.. காரணம் என்ன.?

சமீபகாலமாகவே திரைபிரபலங்கள் விவாகரத்து அதிகரித்து வருகிறது. பாலிவுட் நடிகர் அமீர்கான் தொடங்கி சமந்தா வரை பல பிரபலங்கள் அவர்களின் விவாகரத்து செய்தியை அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர். தற்போது அந்த வரிசையில் மேலும் ஒரு தம்பதி விவாகரத்து செய்தியை அறிவித்துள்ளனர்.

அவர்கள் வேறு யாருமல்ல கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், டாப் நடிகர் தனுஷும் தான். இவர்களின் விவாகரத்து தொடர்பாக இருவரும் ஒரே மாதிரியான அறிக்கையை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். அதில் ஐஸ்வர்யா கூறியிருப்பதாவது, “நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம். எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம்.

இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம். தனுஷும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும்” என கூறியுள்ளார்.

இவர்களின் இந்த திடீர் விவாகரத்து முடிவிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அதன்படி தனுஷ் ஐஸ்வர்யா குறித்த காதல் கிசு கிசு வந்த நிலையில் வேறு வழி இல்லாமல் தான் ரஜினி இந்த திருமணத்தை நடத்தி வைத்தாராம். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கும் கூட இந்த திருமணத்தில் பெரிதாக உடன்பாடில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா தனுஷை விட வயதில் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush-aishwarya-divorce-statement
dhanush-aishwarya-divorce-statement

மேலும் பிரபல நடிகை ஒருவர் தான் இந்த விவாகரத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. அந்த நடிகைக்கும் சமீபத்தில் தான் விவாகரத்தானது. அதற்கு கூட தனுஷ் தான் காரணமாம். ஏற்கனவே தனுஷ் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி தான். இதுவரை ஏராளமான நடிகைகளுடன் தனுஷ் கிசு கிசுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இதுவும் அவர்களின் விவாகரத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்