தோல்விக்கு பின் பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வரும் தனுஷ்.. எதிர்பார்ப்பை கிளப்பிய 5 படங்கள்

சினிமாவை பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பது சகஜம். ஆனால் கதாநாயகிகள் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து விட்டால் அதன் பிறகு அவர்களுக்கு பெரிய அளவில் பட வாய்ப்பு கிடைக்காது. ஆனால் கதாநாயகர்கள் தொடர்ந்து 2, 3 தோல்விப் படங்கள் கொடுத்தாலும் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபாடில்லை.

காரணம் கதாநாயகர்கள் தங்களுக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே கைக்குள் வைத்துள்ளனர். சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், அஜித் நடிப்பில் வெளியான வலிமை போன்ற படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் தற்போது வரை இவர்களுக்கு பட வாய்ப்பு தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது, அந்த வரிசையில் தற்போது தனுஷூம் இடம் பிடித்துள்ளார்.

அதாவது தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த படங்கள் திரையரங்கில் வெளியாகவில்லை அதனால் தனுஷ் ரசிகர்கள் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தனுஷ் தோல்வி படங்களை கொடுத்த உடன் இனிமேல் இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்காது எனவும் அது மட்டுமில்லாமல் இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் ஒரு சில சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வந்தனர்.

ஆனால் தற்போது தனுஷ் நடிப்பில் ஹாலிவுட்டில் வெளியாகி உள்ள ‘தி கிரே மேன்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. அதுவும் தனுஷ் நடிப்பை ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் புகழ்ந்து பேசினர் தனுஷ் போன்ற ஒரு ஒழுக்கமான நடிகரை பார்த்ததில்லை எனவும் மேலும் படப்பிடிப்பில் அமைதியாக இருக்கக்கூடிய இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த மனிதர் எனவும் கூறிவந்தனர்.

மேலும் வெளியான தி கிரே மேன் படத்தின் மூலம் தனுஷ் தனது வெற்றியை மீண்டும் நிரூபித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவரது நடிப்பில் அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற படங்கள் வெளியாக உள்ளதால் இப்படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story

- Advertisement -