கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மீனாவின் அப்பா.. துணிந்து சவால் விட்ட தனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது அடுத்தடுத்த திருப்பங்களுடன் பரபரப்பாக கதையை நகர்த்தி வருகிறார்கள். இதில் ஜீவா, அண்ணன் மேல் இருக்கும் கோபத்தினால் இவரிடம் இருந்த ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து மாமனார் வீட்டில் தங்கி இருக்கிறார். ஆனாலும் இவர் பக்கத்தில் என்னதான் நியாயம் இருந்தாலும் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விதமாக மாமனார் வீட்டிற்கு போகாமல் கதிர் மாதிரி தனியாக தொழில் செய்து குடும்பத்தை நடத்தி இருந்தால் இன்னும் இந்த கதை விறுவிறுப்பாகவும், பார்க்க ஆர்வமாகவும் இருந்திருக்கும்.

அடுத்ததாக கண்ணன், சுயமாகவும் சிந்திக்க தெரியாது நல்லதை எடுத்துச் சொன்னாலும் புரியாது. ரெண்டு கிட்ட வயசுல இருந்துகிட்டு பொண்டாட்டி சொல்வது தான் கரெக்டா இருக்கும் என்று அவர் பின்னாடியே போய்கிட்டு இருக்கான். இதெல்லாம் கவர்மெண்ட் சம்பளம் அவங்க கையில இருக்குன்னு ஆடுற ஆட்டம் தான். வேற எதை பத்தியும் யோசிக்காமல் தடுக்கிறது.

Also read: அனாதையாக சுற்றி திரிய போகும் கோபி.. ராதிகா எடுக்கும் அதிரடி முடிவு

இன்னொரு பக்கம் தனம், எப்படியாவது மறுபடியும் இந்த குடும்பம் ஒன்று சேருமா என்று எந்நேரமும் மூஞ்சி தொங்கப் போட்டுக் கொண்டே இருக்கிறார். அடுத்ததாக கதிர், அன்னிக்கு ஆறுதல் சொல்லியே தேஞ்சு போயிட்டாரு. ஆனால் இதெல்லாம் ஒண்ணுமே நடக்காத மாதிரி மூர்த்தியுடன் ரியாக்ஷன் இருக்கு. அடுத்து இந்த வார ப்ரோமோ படி முல்லைக்கு வளைகாப்பு பங்க்ஷன் நடத்த வேண்டும் என்று அவருடைய அம்மா வந்து சொல்கிறார்.

இந்த பங்க்ஷன் மூலம் மறுபடியும் குடும்பம் ஒன்று சேரும் என்ற நம்பிக்கையில் தனம் ஆர்வத்துடன் ஜீவாவை தேடி மீனாவின் அப்பா வீட்டிற்கு வருகிறார். பின்பு ஜீவா மற்றும் மீனாவிடம் முல்லை வளைகாப்பு பற்றி சொல்லிட்டு நீங்கள் அனைவரும் கண்டிப்பாக வரவேண்டும். அப்பதான் இந்த வளைகாப்பில் முல்லை சந்தோஷமாக இருப்பாள் என்று கூப்பிடுகிறார்.

Also read: ஆணவத்தால் ஆடும் ஐஸ்வர்யா.. கண்ணன் எடுக்க போகும் முடிவு

அத்துடன் நம் அனைவரும் ஒற்றுமையாக இந்த பங்க்ஷனை நடத்தினால் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும் இதன் மூலம் நம்ம குடும்பம் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பாகவும் இருக்கும் என்று கூறுகிறார். ஆனால் மீனாவை பார்க்கும் போது தான் கொஞ்சம் பாவமாக இருக்கிறது. ஏனென்றால் அவரால் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாமல் அவர் அப்பா சொல்வதை கேட்டுகிட்டு அப்படியே எனக்கென்ன என்று இருக்கிறார்.

ஆனால் மீனாவின் அப்பா, தனத்திடம் நேரடியாகவே இந்த பங்க்ஷனை காரணமாக வைத்து மறுபடியும் மீனாவும் ஜீவாவும் உங்கள் குடும்பத்துடன் ஒன்று சேருவார்கள் என்று நினைக்காதீர்கள். அது கனவில் கூட நடக்காது என்று வஞ்சகத்தோடு பேசுகிறார். ஆனால் அதற்கு தனம் எங்களைப் பிரிந்து ஜீவாவால ரொம்ப நாள் இருக்க முடியாது எங்க கூட கண்டிப்பா வருவான் என்று சவால் விடுகிறார்.

Also read: 1200 எபிசோடுகளை கடந்த சூப்பர் ஹிட் சீரியல்களை ஊத்தி மூடிய விஜய் டிவி.. ஏப்ரலில் அடுத்தடுத்து நிறைவடையும் 4 சீரியல்கள்

Next Story

- Advertisement -