வடிவேலுடன் இந்த ஒரு காட்சியில் நடித்ததால் பட வாய்ப்பை இழந்தேன்.. புலம்பும் பிரபலம்

சரத்குமாரின் மாயி படத்தில் வடிவேலு பெண் பார்க்கும் காட்சி எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அந்தக் காட்சியில் பெண்ணின் அப்பா கேரக்டர் வாம்மா மின்னல் என்றதும், அந்தப் பெண் சரக்கென்று வந்து போய்விடும். இந்த காமெடி சீன் ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டது. மாயி படத்தில் மின்னலாக நடித்த பெண் நடிகை தீபா. இப்படத்திற்குப் பிறகு இவர் மின்னல் தீபா என்று அழைக்கப்பட்டார்.

மின்னல் தீபா மாயி படத்திற்குப் பிறகு விஜயின் தமிழன், மாதவனின் ரன் என பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை விட சீரியல்களில் கவனம் செலுத்தி வந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். தற்போது சன் டிவியில் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார்.மின்னல் தீபா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் பட வாய்ப்புகளை இழக்க மின்னல் கேரக்டர்தான் காரணம் என அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார். மாயி படத்திற்குப் பிறகு மின்னல் கேரக்டர் பெரிய அளவில் ரீச் ஆனது.

மின்னல் கேரக்டர் ஆல் தீபாவிற்கு பட வாய்ப்புகள் நிறைய வரும் என வடிவேலு சொல்லியிருந்தார். தீபா மாயி படத்தில் மின்னல் கதாபாத்திரத்தில் மாறு கண் இருக்கிற பெண்ணாக நடித்திருந்தார்.

ஆனால் அந்த கேரக்டருக்கு நிஜமாகவே மாறுகண் உள்ள பெண்ணை நடிக்க வச்சிருக்காங்க என சிலர் தப்பா சொல்ல அதை உண்மை என நினைத்து சினிமா வட்டாரத்தில் அனைவரும் நம்பி விட்டார்கள். இதனால் மின்னல் தீபாவிற்கு வரவேண்டிய பட வாய்ப்புகள் கைநழுவிப் போனது. மாயி படத்தில் பெரிய ரீச் கிடைத்தாலும் மின்னல் தீபாவிற்கு அது பயன்படாமல் போய்விட்டது.

தற்போது தமிழ் சினிமாவில் 20 ஆண்டு இடைவேளைக்கு பின் மீண்டும் மின்னல் தீபா ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். கதிர் இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாக உள்ள ராஜ வம்சம் படத்தில் மின்னல் தீபா நடித்துள்ளார். அதேபோல் தற்போது வடிவேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.