ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

குணசேகரனிடம் வேஷம் போட்டு கவுக்கும் மருமகள்கள்.. குடும்பத்துடன் போடும் சதி வேலைகள்

தற்போது வருகின்ற எபிசோடுகளை பார்க்கும் பொழுது அடுத்த நாள் எப்படா வரும் அப்படிங்கிற அளவுக்கு ரொம்பவே ஜாலியாகவும், விறுவிறுப்பாகவும் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் ரேணுகா நந்தினி இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து அடிக்கடி குணசேகரனை குத்தலாக பேசுவதை பார்க்கும் போதே செம்ம என்ஜாய்மென்ட் ஆக இருக்கிறது.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் குணசேகரா, அனுபவி ராஜா அனுபவி என்று சொல்லும் அளவிற்கு அந்த வீட்டின் மருமகள்கள் காரியத்தில் இறங்கி விட்டார்கள். குணசேகரன் வழியிலேயே போய் அவரை கவுத்து விட வேண்டும் என்று வேஷம் போட்டு வருகிறார்கள். முள்லை முள்ளால தான் எடுக்கணும் சொல்லுவாங்க அதுபோல குணசேகரனுடைய வழியில் போய் தான் அவரை கவுக்க வேண்டும்.

Also read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

அதாவது குணசேகரன் இஷ்டப்படியே கல்யாணத்திற்கு எல்லா வேலைகளையும் பார்க்கப் போகிறார். ஆனால் இவருக்கு தெரியாமல் ஜனனி மற்றும் மற்ற மருமகள்கள் மாஸ்டர் பிளான் போட்டு அதே கல்யாண மேடையில் குணசேகரன் மற்றும் எல்லார் முன்னாடியும் ஆதிரை அருண் திருமணத்தை நடத்தி வைப்பது தான் அவர்களுடைய மிகப்பெரிய திட்டமே.

அது எப்படி செய்யப் போகிறார்கள் என்றால் குணசேகரன் எப்படி அப்பத்தாவை மடக்கி 40% சொத்தை பிடுங்கினார். அதே மாதிரி அந்த 40% வைத்து தான் ஜனனியும் காய் நகர்த்தப் போகிறார். ஆனால் அதற்குத்தான் அப்பத்தா ஜீவானந்தம் என்ற ஒரு துடுப்பு சீட்டை குணசேகருக்கு எதிராக தயார் பண்ணி வைத்திருக்கிறார். அதற்குள் ஜனனி, ஜீவானந்தத்தை கண்டுபிடித்து இதற்கு எல்லா முடிவையும் எடுத்து பிரச்சினைகளை சரி செய்ய போகிறார்.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

அப்படி மட்டும் ஜனனி நினைத்தது போல் குணசேகரனை ஜெயித்துவிட்டார் என்றால் இனிமேல் இந்த வீட்டில் இருக்கும் மருமகளுடன் ஆட்டம் தான் சூடு பிடிக்கும். ஏற்கனவே தற்போது ரேணுகா மற்றும் நந்தினி இப்பவே வாய் சவடால் விட ஆரம்பித்து விட்டார்கள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது இப்பொழுது எதிர்நீச்சல் சீரியல் சீரியஸ் ஆகவே இல்லாமல் நல்ல காமெடியாக வாய் விட்டு சிரிக்கும் அளவிற்கு இருக்கிறது.

அதிலும் குணசேகரன் மொக்கை வாங்கும்போது பார்க்கவே குளுகுளுவென்று இருக்கிறது. அப்படியே இந்த கல்யாணம் வரை ரொம்பவே பரபரப்புக்கு நடுவில் இந்த மாதிரி கொஞ்சம் நகைச்சுவையும் வைத்து கதை அமைந்தால் இன்னும் கூடுதலாகவே நன்றாக இருக்கும். அது என்னமோ தெரியல குணசேகரன் மாதிரி ஆளுங்க எல்லாம் இப்படி வச்சு செய்யும்போது பேரானந்தமாக இருக்கிறது.

Also read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

- Advertisement -

Trending News