குணசேகரன் மூஞ்சியில் கரிய பூசிய மருமகள்கள்.. மொய் விருந்தில் கொட்டிய பணம் புத்தியை பயன்படுத்திய ஈஸ்வரி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், நந்தினி மற்றும் கதிர் ஏற்பாடு பண்ணிய மொய் விருந்து நிகழ்ச்சியில் அசிங்கப்பட்டு நிற்கப் போகிறார். அதை நம் கண் குளிர வேடிக்கை பார்க்கலாம் என்று குணசேகரனும் அந்த பங்க்சனுக்கு வந்திருந்தார். அதே மாதிரி குணசேகரன் எதிர்பார்த்தபடி காதுகுத்து விழா முடிந்தது.

அத்துடன் நந்தினி மற்றும் கதிரும் அசிங்கப்படும் அளவிற்கு மொய் விருந்து பொய் விருந்தாகவே மாறிவிட்டது. அதற்கு குணசேகரன் அங்கு வந்து ரகளை பண்ணியதால் அங்கு வந்த சொந்தக்காரர்கள் அனைவரும் கதிர் பக்கம் சேர வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார்கள். அதனால் மொய் பணம் வைக்காமல் சாப்பிட்டு மட்டும் போகலாம் என்று வந்த சொந்தக்காரர்கள் பாதி பேர் திரும்பி விட்டார்கள்.

ஓவராக ஆட்டம் போட்ட குணசேகரனை தோற்கடித்த ஈஸ்வரி

இன்னும் சில பேர் பிச்சை போடுற நெனப்புல 100 ரூபாய் 200 என்று மொய் வச்சு கதிரை அசிங்கப்படுத்தி விட்டார்கள். இதை எல்லாம் பார்த்த குணசேகரன் சந்தோஷத்தில் அப்படி பூர்த்து போய்விட்டார். ஆனால் யார் முன்னாடி ஜெயித்து காட்டணும் என்று நந்தினி கதிர் ஆசைப்பட்டார்களோ அவர்கள் முன்னாடியே அசிங்கப்பட்டு விட்டார்கள்.

இதனால் கோபத்தில் கொந்தளித்த கதிர் ஆவேசமாக கோவப்பட்டு அங்கு இருப்பவர்களிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார். இதை எல்லாம் பார்த்த குணசேகரன், கரிகாலன், ஜான்சி ராணி இதெல்லாம் உங்களுக்கு தேவை தான் என்று ரியாக்ஷன் கொடுத்து கேவலமாக பார்த்தார்கள். ஆனால் இங்குதான் ஒரு எதிர்பாராத டுவிஸ்ட் நடந்திருக்கிறது.

அதாவது இந்த ஒரு விஷயத்தால் கதிர் மற்றும் நந்தினி நொறுங்கிப் போய் விடக்கூடாது என்பதற்காக ஈஸ்வரி புத்தியை பயன்படுத்தி கதிர் மானத்தை காப்பாற்றி விட்டார். அதாவது அவரிடம் இருந்த நகையை மொய் பணமாக கொடுத்து அவர்களை அடுத்த கட்ட வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இதை வெறும் பணமாக பார்க்காமல் நம்மளுக்காக இரண்டு சொந்தங்கள் இருக்கிறது என்று புரிந்து கொண்ட கதிர் பண்ணின தவறுகளையும் ஓவராக குதித்த ஆட்டத்தையும் எண்ணி வருந்தி மன்னிப்பு கேட்கிறார். கடைசியில் இந்த ஒரு சம்பவம் குணசேகரனுக்கு மிகப்பெரிய தோல்வியாகிப் போய்விட்டது. இதற்கு மேலும் அங்கே இருந்து அவமானப்படக்கூடாது என்று உடனடியாக அங்கு இருந்து கிளம்ப ஆரம்பித்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து நந்தினி அவருடைய பிசினஸை துவங்கி கதிர் வாழ்க்கையிலும், நந்தினி ஆசைப்பட்ட கனவையும் நிறைவேற்றும் விதமாக வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டப் போகிறார்கள்.

- Advertisement -