வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

குணசேகரனிடம் சிக்கி சீரழியும் சிறுசு முதல் பெருசு.. நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட மருமகள்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது தான் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் வாயைத் திறந்து பேச ஆரம்பிக்கிறார்கள். அதுவும் சாதாரணமான பேச்சல்ல, குணசேகரனை கிழித்து தொங்கவிடும் அளவிற்கு மொத்த மானத்தையும் வாங்கி அவர்களுக்கு இருந்த ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள். அதாவது ஜனனி மற்றும் நந்தினி மறு வீட்டு விருந்துக்காக ஆதிரை கரிகாலனை கூட்டிட்டு வருகிறார்கள்.

அப்பொழுது ஆர்த்தி எடுக்க குணசேகரன் சொல்ல, என்னமோ கல்யாணம் முறைப்படி நடந்த மாதிரி எல்லாத்தையும் சரியா பண்ணனுமா என்று நந்தினி கேள்வி கேட்கிறார். அந்த நேரத்தில் ஐஸ்வர்யா வயதுக்கு வந்து விட்டாள் என்று ஸ்கூலில் இருந்து கூட்டிட்டு வருகிறார்கள். அதுவும் மூன்று நாட்கள் ஆகியிருக்கிறது. இதை கேள்விப்பட்ட ரேணுகா ரொம்பவே கொந்தளித்து ஏன் இப்படி சொல்லாம மறைத்து விட்டாய் என்று கேட்கிறார்.

Also read: மட சாம்பிராணியாக இருக்கும் தனம்.. அனுதாபத்தை வைத்து டிஆர்பி ரேட்டிங்கை ஏத்தும் விஜய் டிவி

உடனே அனைவரும் வீட்டுக்குள் கூட்டிட்டு போய் அப்பொழுது என்ன பிரச்சினை என்று நந்தினி கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு எல்லாத்துக்கும் காரணம் பெரியப்பா குணசேகரன் அவர்கள் தான் என்று சொல்கிறாள். அத்துடன் அந்த குழந்தை மனதிற்குள் இருந்த ஆதங்கத்தை கொட்டி தீர்க்கும் விதமாக அவருடைய அப்பா தற்குறியாக இருந்து பெரியப்பாவிடம் மானங்கெட்டு போய் நிற்பதை பார்ப்பதற்கு எனக்கு பிடிக்கவே இல்லை.

பிறகு இந்த மாதிரி ஒரு விஷயம் நான் சொல்லியிருந்தால் சடங்கு சம்பிரதாயம் என்று என்னை ஷோகேஸ் பொம்மை மாறி அலங்கரித்து அவர்களுடைய ஸ்டேட்டஸை காட்டி இருப்பார்கள். அதன் பிறகு இந்த கரிகாலன் மாதிரி ஒரு லூசு பையனை என் தலையிலேயே கட்டி வைத்து என் வாழ்க்கை சீரழித்து விடுவார்கள். இது எல்லாம் யோசித்து தான், அது எதுவும் எனக்கு நடக்க கூடாது என்பதற்காக நான் யாரிடமும் சொல்லவில்லை என்று சொல்கிறாள்.

Also read: சொந்தமா உழைச்சு திங்கிற திராணி எனக்கு இருக்கு.. குணசேகரனின் 40% சேரில் இடியை இறக்கிய ரத்த சொந்தம்

இதை கேட்ட ஜனனி எல்லாத்தையும் நாங்க பார்த்துப்போம். நாங்க எல்லோரும் இருக்கும்போது உனக்கு என்ன பயம் என்று சொல்கிறார். இந்த ஜனனி பேசும்போது மட்டும் அவ்வளவு எரிச்சலா வருகிறது. அந்த வீட்டில் இருக்கிற மற்ற எல்லாத்தையும் கூட நம்பலாம் இந்த ஜனனியை மட்டும் நம்பி ஒரு விஷயத்திலும் இறங்க கூடாது என்பதற்கு ஆதிரையின் கல்யாணத்திலேயே பார்த்துட்டோம். இன்னும் அது தெரியாம வாய் சவடால் மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆக மொத்தத்தில் பெண்ணாக பிறந்தாலே லைப் காலி என்ற நினைப்பில் ஐஸ்வர்யாவுக்கு வந்த பயம்தான் அவர் மறைத்ததற்கு காரணம் என்று சொல்கிறார். அத்துடன் ஞானம், ரேணுகாவை என்னடி பிள்ளையை வளர்த்திருக்கிற என்று கேட்க, அதற்கு ரேணுகா புருஷன் என்று கூட பார்க்காமல் நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்கிறார். ஆக மொத்தத்துல குணசேகரன் ஆசைப்பட்ட ஒத்த கல்யாணத்தை நடத்தி வைத்து விட்டு மொத்த மானத்தையும் இழந்து வருகிறார். இனிமேல் தான் இந்த வீட்டில் இருக்கும் சிறுசு முதல் பெருசு வரை ஆடும் ஆட்டத்தை பார்க்க போகிறோம்.

Also read: ரெண்டு பொண்டாட்டி இருந்தும் சந்தோஷம் இல்லாமல் தவிக்கும் கோபி.. ராதிகா பாக்கியாவிற்கு செய்யும் சூழ்ச்சி

- Advertisement -

Trending News