குணசேகரன் மூஞ்சில் கரியை பூசி சங்கு ஊத போகும் தர்ஷினி.. ருத்ர தாண்டவம் ஆடப்போகும் ஈஸ்வரி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினி புத்தி பேதலித்து போய் இருந்ததால் குணசேகரன் ஆட்டி வைக்கும் பொம்மையாக இருந்தார். ஆனால் கொஞ்சம் தெளிந்ததும் நிதானமாகவும் குணசேகரனுக்கு எப்படி அடி கொடுத்தால் திரும்பி எழுந்திருக்க முடியாதோ, அதை மாதிரி மரண அடியாக கொடுக்க வேண்டும் என்று தர்ஷினி ஸ்கெட்ச் போட்டு விட்டார்.

அதன்படி குணசேகரன் சொல்வதை கேட்டுக்கொண்டு மண்டபத்தில் அமைதியாக இருக்கிறார். ஆனாலும் ஒரு தயக்கத்தில் மணப்பெண்ணாக ரெடி ஆகாமல் தவித்து வந்த தர்ஷினியை குணசேகரன் மிரட்ட ஆரம்பித்து விட்டார். அப்பொழுது தர்ஷினி, குணசேகரன் கடத்தி வைத்து நம்மளை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தினார் என்பதை நினைவுப்படுத்தி பார்க்கிறார்.

அதே மாதிரி நம்மளை ஜீவானந்தம் அப்பா காப்பாற்றிய பின்பு எந்த இடத்தில் நிதானமாகவும் விவேகமாகவும் செயல்பட்டு எதிராளியை கவுக்க வேண்டும் என்ற தந்திரத்தையும் சொல்லிக் கொடுத்ததை ஞாபகப்படுத்துகிறார். அந்த வகையில் இதை எல்லாம் மனதில் வைத்து அனைவரது முன்னிலையிலும் குணசேகரன் மூஞ்சியில் கரியை பூசி ஒட்டுமொத்த ஆணவத்திற்கும் சங்கு ஊதப் போகிறார்.

குணசேகரனின் கதை முடியும் நேரம் வந்தாச்சு

இதனை தொடர்ந்து ஜனனி எப்படியோ தர்ஷினி கல்யாணம் பண்ண போகும் மண்டபத்தை மோப்பம் பிடித்து விட்டார். அத்துடன் ஜனனி,ரேணுகா, நந்தினி மற்றும் ஈஸ்வரி அனைவரும் மண்டபத்திற்கு வந்து கதவை தட்டுகிறார்கள். இதை ராமசாமி, குணசேகரன் பார்த்த பின்பு கல்யாணத்தை வேக வேகமாக நடத்த சொல்கிறார்.

ஆனால் இந்த நேரத்தில் ஜனனியின் அப்பத்தா முறைப்படி நடக்க வேண்டிய எல்லா சடங்கு சம்ப்ராதையும் நடக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் இங்கு இருந்து கிளம்பி விடுகிறோம் என்று சொல்லிய நிலையில் குணசேகரன் எதுவுமே காது கொடுத்து கேட்காமல் முகூர்த்தத்திற்கான மந்திரத்தை சொல்ல சொல்லி ஐயரை பிளாக் மெயில் பண்ணுகிறார்.

ஆனால் அதற்குள் குணசேகரன் வீட்டு நான்கு மருமகள்களும் கதவு மேல் ஏறி குதித்து உள்ளே வந்து விடுகிறார்கள். அவர்கள் வரும் ஆவேசத்தை பார்க்கும் பொழுது கண்டிப்பாக மண்டபத்தில் ஒரு சம்பவம் நடக்கப் போகிறது. அதுவும் ஈஸ்வரி இதுதான் சான்ஸ் என்று குணசேகரனை வெளுத்து வாங்கும் அளவிற்கு ருத்ர தாண்டவம் ஆடப்போகிறார்.

இது மட்டுமில்லாமல் இந்த ஒரு சான்ஸ்க்கு தான் நான் காத்துக் கொண்டிருந்தேன் என்பதற்காக தர்ஷினி புத்திசாலித்தனமாகவும் தைரியமாகவும் குணசேகருக்கு எதிராக ஒரு முடிவை எடுக்கப் போகிறார். அத்துடன் குணசேகரன் தான் என்னை கடத்தி வைத்து எல்லா சித்திரவதையும் செய்ய ஆள் வைத்து துன்புறுத்தினார் என்பதையும் போட்டு உடைக்கப் போகிறார்.

ஆக மொத்தத்தில் இந்த ஒரு சம்பவம் குணசேகரன் எழுந்து வரவே முடியாத அளவிற்கு மரண அடியாக இருக்கப் போகிறது. மக்கள் இந்த கண்கொள்ளா காட்சியை பார்ப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முறை பெண்களின் வெற்றியும் அவர்கள் தொடர்ந்து ஜெயிக்க போவதையும் இனிவரும் கதையில் பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்