Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனுக்கு எதிராக ஈஸ்வரி மகளிர் அணியை கூட்டிட்டு வந்து தர்ஷினியின் கல்யாணத்துக்கு நியாயம் கேட்கிறார். உடனே குணசேகரன் என் மகள் தர்ஷினிக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு யார் சொன்னா? நான் என் பையன் தர்ஷனுக்கு தான் கல்யாணம் நடத்தி வைக்க போகிறேன் என்று கூறிவிட்டார்.
அதுவும் என் தங்கச்சி உமையாளின் மகள் கீர்த்திக்கும் என் மகன் தர்ஷனுக்கும் தான் கல்யாணம் நடக்கப் போகிறது. அவர்களுக்குத்தான் நாளைக்கு நிச்சயதார்த்தம் பண்ணப் போகிறேன் என்று சொல்லி தர்ஷனை கூப்பிட்டு கேட்கிறார். அதற்கு தர்ஷனும் ஆமாம் என்று தலை ஆட்டி குணசேகரனுடன் சேர்ந்து அராஜகமாக நடந்து கொண்டார்.
அந்த வகையில் தர்ஷினிக்கு மட்டும் இல்ல தர்ஷனுக்கும் இப்பொழுது புத்தி பேதலித்து போய்விட்டது. அதனால் குணசேகரன் அவருடைய இரண்டு வாரிசுகளை வைத்து கூத்தடித்துக் கொண்டு வருகிறார். இதில் வழக்கம் போல ஈஸ்வரி எதுவும் பேச முடியாமல் தோற்றுப் போய் நின்று விட்டார்.
இதில் குணசேகரன் என்ன பண்ணினாலும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டு ஒத்து ஊதி வருகிறார் விசாலாட்சி. இதனை தொடர்ந்து யாருக்கும் தெரியாமல் தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று குணசேகரன் களத்தில் இறங்கி விட்டார்.
தில்லு முல்லு வேலையை பார்க்க போகும் குணசேகரன்
அந்த வகையில் சித்தார்த்தை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமியுடன் சேர்ந்து ஒரு தில்லு முல்லு வேலையை பார்க்கப் போகிறார்.
இதற்கிடையில் ஜனனி பாதுகாப்பாகத் தான் இருக்கிறார் என்ற ஒரு விஷயத்தை கூட சக்தியிடம் சொல்லாமல் சக்தியை தவிக்க விட்டு வருகிறார். அத்துடன் குற்றவையுடன் சேர்ந்து அஞ்சனவையும் அம்மாவையும் தேடி கண்டுபிடிப்பதற்காக ராமசாமியை பாலோ பண்ணி போகிறார். இவர்களுடன் சேர்ந்து கதிரும் தேடுகிறார்.
ஆனால் இன்னொரு பக்கம் சக்தி, சித்தார்த்தை அடைத்து வைத்திருக்கிறார் என்ற விஷயம் கரிகாலனுக்கு தெரிந்து விட்டது. அதை சாட்சியுடன் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக போனில் வீடியோவை ரெக்கார்ட் பண்ணி விடுகிறார். இப்படி ஒவ்வொரு விஷயமும் என்ன ஆகப் போகிறது என்று தெரியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜீவானந்தம் ஹீரோ மாதிரி என்டரி கொடுத்தால் தான் எல்லாமே சரியாகும் போல. அதற்குத்தான் பிரச்சனை மேல் பிரச்சினையாக உருவாகிக்கொண்டே வருகிறார். எப்படி இருந்த எதிர்நீச்சல் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பும் அளவிற்கு கொடுமையாக கதை நகர்ந்து வருகிறது.