Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், உமையாள் மற்றும் குணசேகரன் சேர்ந்து போட்ட பிளானுக்கு எதிராக கதிர் கச்சிதமாக காய் நகர்த்துகிறார். அதாவது நிச்சயதார்த்தத்துக்கு பதிலாக கல்யாணத்தை தான் பண்ணப் போகிறார்கள் என்று கதிருக்கு சந்தேகம் வந்துவிட்டது.
அதனால் சக்தியை தனியாக கூப்பிட்டு குணசேகரன் கூடவே இருந்து எல்லா அட்டூழியத்தையும் பண்ணின எனக்கு தான் அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியும். அவர் ஜெயிக்க வேண்டும் என்றால் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார். அதே மாதிரி நானும் ஒரு பிளான் வைத்திருக்கிறேன்.
அதற்கு நீ தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கதிர், சக்தியிடம் சொல்கிறார். அதாவது இவர்கள் போட்ட பிளான் நம்மளால் தடுக்க முடியாது. ஆனால் குளறுபடியை ஏற்படுத்தலாம். அதற்கு சித்தார்த்தை தூக்கிடலாம் என்ற பிளானை சொல்கிறார்.
உடனே சக்தி, அதற்கு தான் சட்ட ரீதியாக தடுப்பதற்கு அண்ணி முயற்சி பண்ணுகிறார்கள் அதுவே போதும் என்று சொல்கிறார். ஆனால் கதிர் அவர்கள் தடுப்பதற்கு எடுக்கும் முயற்சி பண்ணட்டும். ஆனால் அது எப்படி சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.
அதனால் நம் பக்கத்தில் இருந்து இந்த மாதிரி ஒரு விஷயத்தை பண்ணினால் மட்டும்தான் தர்ஷினி மற்றும் அஞ்சனா வாழ்க்கையே காப்பாற்ற முடியும் என்று கதிர் சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட பிறகு சக்திக்கும் இந்த ஐடியா ஓகே என்று சொல்லிவிட்டார்.
கதிருடன் சேர்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடும் தர்ஷன்
பிறகு உமையாள், ஏதோ பிளான் பண்ணி ஜனனியின் அம்மாவையும் தங்கையையும் சிக்கலில் சிக்க வைத்து இருக்கிறார் என்று தெரிந்து விட்டது. உடனே ஜனனி மற்றும் சக்தி இருவரும் அம்மா வீட்டிற்கு போகிறார்கள். ஆனால் அங்கே போனதும் அம்மா மற்றும் தங்கையே காணவில்லை.
பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரித்த பொழுது போலீஸ் வந்து கூட்டிட்டு போயிட்டார்கள் என்று சொல்கிறார்கள். உடனே வீட்டுக்குள் போய் பார்த்த ஜனனி மற்றும் சக்திக்கு ஒரு லெட்டர் மற்றும் வீடியோ கிடைக்கிறது. அதில் அஞ்சனா பேசின விஷயங்கள் இருக்கிறது. அதை வைத்து ஜனனி அடுத்த பிளானை போடப் போகிறார்.
இப்படி இவர்கள் எல்லோரும் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் பொழுது கதிர் போட்ட பிளானை முறியடிக்கும் விதமாக உமையாள் ஏதாவது சதி வேலையை தீட்டி வைத்திருப்பார். ஆனாலும் இந்த விஷயத்தில் கதிருக்கு வெற்றி நிச்சயம் கிடைத்துவிடும். அத்துடன் ஏற்பாடு பண்ணின கல்யாணத்திற்கு ஜீவானந்தம் மற்றும் அப்பத்தா எண்டரி கொடுக்கப் போகிறார்கள்.
அதன்மூலம் குணசேகரனின் வண்டவாளம் அனைத்தும் தண்டவாளம் ஏறப்போகிறது. இதற்கிடையில் தர்ஷன் உடைய மாற்றம் கண்டிப்பாக கதிருக்கு உதவியாகத்தான் அமையப் போகிறது. தர்ஷனுக்கு பின்னாடி கண்டிப்பாக கதிர் உடைய பிளானும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.