நயன்தாராவிற்கு போட்டியாக தங்கல் பட நடிகையை களமிறக்கும் அட்லி.. வெளியான அதிரடி அப்டேட்.!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான மற்றும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடிடி-யில் வெளியான நெற்றிக்கண் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நயன்தாரா தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் ஒரு தெலுங்கு படம் உட்பட 4 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் முதன் முறையாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதுவும் தமிழ் இயக்குனர் அட்லி படம் மூலமாக.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படம் மூலமாக அறிமுகமானவர் தான் இயக்குனர் அட்லி. இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை இயக்கினார்.

தற்போது அட்லி பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானை வைத்து இந்தியில் முதல்முறையாக படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

sanya-aamir-khan
sanya-aamir-khan

இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு நடிகையாக சான்யா மல்ஹோத்ரா என்பவர் நடிக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே அமீர்கான் நடித்த ‘தங்கல்’ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -