சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்திட்ட கண்ணம்மா.. விறுவிறுப்பை கூட்டும் கதைக்களம்!

விஜய் டிவியின் பிரபலமான சீரியல்களில் முதல் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சீரியலாக கருதப்படுவது பாரதிகண்ணம்மா. இந்த சீரியலுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஏற்கனவே சுவாரசியத்தை அள்ளித் தெளிக்கும் இந்த சீரியலில் மேலும் விறுவிறுப்பை கூட்ட ஒரு புது கதைக்களம் உருவாக இருக்கிறது.

சில நாட்களாகவே கண்ணம்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பாரதியின் எண்ணத்திற்கு ஏற்றவாறு, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் வில்லி வெண்பா மேலும் பாரதியை ஏற்றி விடுகிறார். தற்பொழுது வெண்பா மீது கடுப்பில் இருக்கும் கண்ணம்மா சரியான சந்தர்ப்பம் பார்த்து வெண்பா செய்யும் தவறை ஆதாரத்துடன் போலீசில் மாட்டி விடுகிறார்.

அவரும் சிறைக்கு சென்று விட்டார். சரி சிலநாட்களுக்கு வில்லி வெண்பா தொல்லை கண்ணம்மாவுக்கு இருக்காது என்று நினைக்கையில், சிறையில் தன்னை பார்க்க வந்த பாரதியிடம் கண்ணம்மா பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவரை மேலும் கண்ணம்மாவை வெறுக்கும் அளவிற்கு நாரதர் வேலையை செய்கிறார் வெண்பா.

அந்த வெறுப்பின் உச்சத்தில் விவாகரத்து நோட்டீசை கண்ணம்மாவுக்கு அனுப்பிவிடுகிறார் பாரதி. எவ்வளவோ போராடிய கண்ணம்மா இந்தமுறை சலித்துப் போய் பாரதியின் விருப்பத்திற்கு இணங்க அதில் கையெழுத்திட்டார். இனி வரும் எபிசோடுகளில் இவர்களுக்கு கோர்ட், ஒரு வாய்ப்பு கொடுக்கும் விதமாக இருவரையும் சிலகாலம் ஒன்றாக சேர்ந்து வாழ சொல்லி உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க வழக்கம்போல் லட்சுமி கண்ணம்மாவிடம் தன் அப்பாவை பற்றி கேட்க பொறுத்துக்கொள்ள முடியாத கண்ணம்மா உண்மையை உடைக்கிறார். அதில் கண்ணம்மா உன் அப்பா என்னை பிடிக்காமல் என்னை விட்டு பிரிந்து விட்டார் என்று கூறி வருத்தப்பட்டார்.

உடனே லட்சுமி அப்போ அப்பா இனி என்ன பார்க்க வரவே மாட்டாரா என்று கலக்கம்முற, கண்ணம்மா கவலைப்படாத உங்க அப்பாவோட நான் உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று ஆறுதல் கூறி சமாளிக்கிறார்.

- Advertisement -

Trending News