ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வாரிசு படத்தில் விஜய் பயன்படுத்தும் காஸ்ட்லி பைக்.. இத்தனை லட்சமா?

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தளபதி விஜயின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டு அந்தப் படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகின.

இதுவரை இந்தப் படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியான நிலையில், அவை அனைத்தும் ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து வெளியான நான்காவது போஸ்டரில் தளபதி விஜய் காஸ்ட்லியான பைக் ஒன்றில் அமர்ந்து ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த பைக்கின் பெயர் யெஸ்டி அட்வெஞ்சர் (Yezdi Adventure). Adventure Matte Mambo Black, Adventure Camo Ranger Camo மற்றும் Adventure Matte Slick Silve என மூன்று மாடல்களில் கிடைக்கக்கூடிய இந்த பைக்கின் ஆரம்ப விலை சுமார் 2.10 லட்சமாம். இந்த யெஸ்டி அட்வெஞ்சர் லிட்டருக்கு சுமார் 35 கிலோ மீட்டர் வரை மைலெஜ் கொடுக்கிறது.

இந்த பைக்கை வாரிசு படத்தில் தளபதி விஜய் இரண்டு காட்சிகளில் ஓட்டியபடி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. வாரிசு படத்திற்கு பிறகு இந்த பைக் அவருடைய ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்ட் ஆகப்போகிறது. முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட் ஆகவே உருவாகும் வாரிசு படத்தில் தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு, நாசர், பிரகாஷ்ராஜ், ஷாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். வாரிசு திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் எக்கச்சக்கமான ரசிகர்களுக்கு சொந்தக்காரரான தளபதி விஜய்யின் வாரிசு படத்தை குறித்த அப்டேட்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து அந்த படத்தை குறித்த ஆர்வத்தை தூண்டுவதால், படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Trending News