சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜய் டிவி குக் வித் கோமாளி பிரபலத்தை பணத்தை கொடுத்து மயக்கி ஜீ தமிழ்.. இவர் போவார்னு எதிர்பார்க்கல!

முன்னணி நடிகர்கள் மற்றும் அவர்களது படங்களுக்குள் எப்படி போட்டி இருக்கிறதோ அதேபோல் தமிழ் மொழியில் உள்ள டிவி சேனல்களுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. சீரியலில் தொடங்கி தற்போது சின்ன சின்ன விஷயங்கள் வரை போட்டி பொறாமைகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை டாப்பில் இருக்கும் டிவி சேனல்கள் என்றால் அது சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகியவை தான். தற்போது பெரும்பாலும் விஜய் டிவியையே அனைவரும் ரசித்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு அவர்களது நிகழ்ச்சிகள் தரமாகவும், ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வகையில் அமைந்து வருவதால் விஜய் டிவிக்கு சமீபகாலமாக டிஆர்பி ரேட்டிங் உச்சத்தில் உள்ளது.

இதன் காரணமாக தற்போது விஜய் டிவியில் இருக்கும் முக்கியமான சில பிரபலங்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறது ஜீ தமிழ் நிறுவனம். அந்த வகையில் சமீபத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ஒருவரை கேட்டதை விட அதிகமாக கொடுத்து தன் பக்கம் இழுத்து விட்டார்களாம்.

சமீபகாலமாக மக்கள் விஜய் டிவியை அதிகம் பார்ப்பதற்கு காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதில் மிகவும் புகழ்பெற்றவர் அஸ்வின். அதுவும் இளம் ரசிகைகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் அவரை வளைத்தால் இளம் ரசிகர்களை ஜீ தமிழ் பக்கம் கொண்டு வந்து விடலாம் என தற்போது ஜீ தமிழின் இன்னொரு சேனலான ஜீ திரை சேனலுக்கு விளம்பர படமொன்றில் நடித்துள்ளார் அஸ்வின். இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தயாரிக்கும் சீரியலில் ஹீரோ வாய்ப்பும் கொடுக்க உள்ளதாம்.

cookwithcomali-ashwin
cookwithcomali-ashwin
- Advertisement -

Trending News