ரியாலிட்டி ஷோ என்றாலே அது விஜய் டிவிதான். மற்ற சேனல்களை காட்டிலும் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களை கவரும்படி காமெடி கலந்து நல்ல பொழுதுபோக்கு அம்சமாக நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து கொடுப்பார்கள்.
அந்த வகையில் இந்த வருடம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற நிகழ்ச்சியாக வலம் வருகிறது குக் வித் கோமாளி. தற்போதுவரை ஒரு ஹேட்டர்ஸ் கூட இல்லை என்பதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் அவர்களுடைய புகழுக்கு ஏற்ப சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடந்து வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் என்றால் அது ஷகிலா தான்.
ஒரு எபிசோடுக்கு 50,000 வாங்குகிறாராம். அதனை தொடர்ந்து நடன இயக்குனர் பாபா பாஸ்கர் மற்றும் மதுரை முத்து ஆகிய இருவரும் 40,000 வரை வாங்குகிறார்கள். மேலும் அஸ்வின் 25,000 வாங்குகிறார். ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற கோமாளிகளான சுனிதா, சிவாங்கி, மணிமேகலை போன்றோருக்கு 20 ஆயிரம் வரை கொடுக்கிறார்களாம்.
ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தூணாக இருக்கும் புகழ் மற்றும் பாலாவுக்கு வெறும் 15 ஆயிரம் மட்டுமே கொடுக்கின்றனர். புகழ் மற்றும் சிவாங்கி போன்றோர் இல்லையென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியே தட்டுத்தடுமாறி விடும். அப்படி இருக்கையில் மிகவும் குறைவான சம்பளம் கொடுப்பது அவர்களுக்கே நியாயமா என்பது தெரியவில்லை.
மேலும் சக போட்டியாளர்களான தீபா, தர்ஷா குப்தா, பவித்ரா போன்றோர் பத்தாயிரம் வாங்குகிறார்கள். மேலும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சிலருக்கு இதைவிட குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.