பிரம்மாண்டமாக தொடங்கும் குக் வித் கோமாளி சீசன்3.. யார் குக்.? யார் கோமாளிகள் தெரியுமா?

விஜய் டிவியில் வித்தியாச வித்தியாசமான கன்டன்ட்களை கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி தனது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளது.

இந்த புது சீசனில் பல்வேறு புதிய மாற்றங்களையும் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், புதுவிதமான பரிமாணத்துடன் இந்நிகழ்ச்சி வர உள்ளதாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் குழுவினர் தகவல் தெரிவிக்கின்றனர். அதேசமயம், இந்நிகழ்ச்சிக்கான முதற்கட்ட வேலைப்பாடுகள் தொடங்கிவிட்டதாக குக் வித் கோமாளி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என்றும் விஜய்டிவி தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் குக் வித் கோமாளியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஓடியது. ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாகத் திருப்திப்படுத்தியது.

அதனை தொடர்ந்து தற்போது மூன்றாம் சீசனில் குக்குகளையும், கோமாளிகளையும் புதுவிதமான வழிமுறையை பின்பற்றி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக நிகழ்ச்சியின் குழுவினர் தெரிவித்துள்ளனர். பிக்பாஸ் பிரபலங்களான சுரேஷ் சக்ரவர்த்தி, சனம் ஷெட்டி, அனிதா சம்பத் இவர்களைத் தவிர சீரியலில் பிரபலமான நடிகைகளும், அதேபோல் யூடியூபில் பிரபலமான சமையல் பிரபலங்களும் இடம் வர பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

cooku-with-comali-season3
cooku-with-comali-season3

ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலமடைய முக்கியமாக கோமாளிகளான பாலா, சிவாங்கி, ஷரத், புகழ் போன்ற முக்கியமான போட்டியாளர்கள் கோமாளியாகவே வருகின்ற இந்த சீசனிலும் தொடர்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அத்துடன் வரவிருக்கும் இந்த சீசன் நவம்பர் மாதத்திலிருந்து ஒளிபரப்பாக கூடும் என்று இந்நிகழ்ச்சியின் குழுவினர் கூறியுள்ளனர்.

ஏற்கனவே குக் வித் கோமாளி மூன்றாவது சீசனுக்காக ஒரு ரசிகர் பட்டாளமே காத்திருந்தனர். தற்போது வரவிருக்கும் இந்த மூன்றாவது சீசன் அதிகப்படியான பார்வையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கை அள்ளும் என்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு டஃப் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.