எழிலை தொடர்ந்து CWC 4 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகும் அடுத்த  பிரபலம்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தான். இதுவரை மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து தற்போது 4-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பிரபலங்கள் குக்குகளாகவும், காமெடி நடிகர் நடிகைகள் கோமாளியனாகவும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை பதற வைத்துள்ளது. ஏனென்றால் சென்ற வாரம் பாக்கியலட்சுமி  சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்த கொண்டிருக்கும் VJ விஷால் எலிமினேட் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வாரம் நடிகை ஷெரின் எலிமினேட் ஆகிறார். 

Also Read: புது லுக்கில் ஷாக் கொடுக்கும் வனிதா.. ஜீன்ஸ், பாப்கட் என ஆளே மாறிய புகைப்படம்

ஹோம் மேக்கர் மட்டுமில்லாமல் இளைஞர்களும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள் என்றால், அது ஷெரினின் கொஞ்சலான பேச்சைக் கேட்பதற்காக தான். அப்படி இருக்கும்போது கன்டென்ட் கொடுக்கும் கன்டஸ்டண்ட் ஆன ஷெரினை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த வாரம் ஷெரினை போலவே புகழ் வேடமிட்டு அடித்த  லூட்டியை பார்த்து ரசிகர்கள் வயிறு புண்ணாகும் அளவுக்கு சிரித்தனர். அப்படி இருக்கும்போது  திடீரென்று ஷெரின் இந்த வாரம் வெளியேற்றப்பட்டது ரசிகர்களை வருத்தம் அடைந்துள்ளது.

Also Read: சீரியலில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் 2வது திருமணம்.. பாக்கியலட்சுமி பிரபலம் செய்த மானங்கெட்ட விவாகரத்து

அத்துடன் இனி குக் வித் கோமாளி நிகழ்சியில் ஷெரினின் க்யூட்டான எக்ஸ்பிரஷனை பார்க்க முடியாத என்றும் அவருடைய ரசிகர்கள் கலங்குகின்றனர்.  அதேபோல் இந்த சீசனின் வெற்றியாளர் சிவாங்கி தான் என பலரும் அடித்துச் சொல்கின்றனர்.

அதற்கேற்றார் போல் ஒவ்வொரு வாரமும் சிவாங்கி சேவ் ஆகுவதை பார்த்தால் அவர்தான் வெற்றியாளராக இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல கடந்த மூன்று சீசன்களிலும் கோமாளியாக ரகளை செய்த சிவாங்கி இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கி சீரியஸாக குக் செய்து கொண்டிருப்பது ரசிகர்களின் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

Also Read: நூலிலையில் தப்பிய சிவாங்கி, விஜய் டிவி செய்த மட்டமான வேலை.. எலிமினேட் ஆன போட்டியாளர்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்