வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அகில உலக சூப்பர் ஸ்டாருடன் ஒப்பந்தமான சிவாங்கி.. குவியும் பட வாய்ப்புகள்!

ஏவிஎம் தயாரிப்பில் 1972 ஆம் ஆண்டு முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் காசேதான் கடவுளடா. இப்படம் அந்த சமக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்று வரை நகைச்சுவை படங்களில் இப்படத்திற்கு இணை எதுவுமே இல்லை.

இந்நிலையில் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் இந்த படம் மீண்டும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது.

படத்தில் நாயகியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் ஷிவாங்கி.

இவர் தனது குரல் மற்றும் குழந்தைத்தனமான குறும்பால் ரசிகர்கள் மனதில் வெகுவிரைவில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நகைச்சுவை செய்யத் தொடங்கினார். இதன்மூலம் இன்னும் பிரபலமான ஷிவாங்கிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது.

sivaangi-yogibabu
sivaangi-yogibabu

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகும் ஆர்டிகிள் 15 போன்ற படங்களில் சிவாங்கி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் நிலையில் வளர்ந்து வரும் நடிகையாக சிவாங்கி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

Trending News