குக் வித் கோமாளி சிவாங்கி-க்கு அடித்த ஜாக்பாட்.. வாய்ப்புக் கொடுத்த அஜித் பட தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருக்கும் நடிகர்களை விட யூடியூப் மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் அதிகமாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ஒரு ரியாலிடி ஷோவாக உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து பலரும் சினிமாவுக்கு வர ஆரம்பித்து விட்டனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் ஒரு நிகழ்ச்சியில் எந்த ஒரு போட்டியாளரையும் வெறுக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் மற்றும் சிவாங்கி போன்றோர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். மேலும் சினிமாவிலும் களமிறங்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் புகழ் ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகளை பெற்றுள்ளார்.

தற்போது அதே வரிசையில் சிவாங்கியும் முன்னணி நடிகரின் பட வாய்ப்பு ஒன்றை பெற்றுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, விஜய் டிவியில் படிப்படியாக உயர்ந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தான்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்ற போது கண்டிப்பாக என்னுடைய அடுத்தப் படத்தில் இதிலிருந்து ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பேன் என கூறியதன் அடிப்படையில் தற்போது சிவாங்கிக்கு அடுத்ததாக நடிக்கும் டான் படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் அருண் ராஜா கூட்டணியில் உருவாகும் ஆர்டிக்கிள் 15 படம் தமிழ் ரீமேக்கில் சிவாங்கிக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வரும் போனி கபூர் தயாரிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

sivangi-cinemapettai
sivaangi-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்