வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

குக் வித் கோமாளி 2 பைனலில் வெல்லப்போவது இவர்தான்.. விஜய் டிவி வட்டாரங்களிலிருந்து கசிந்த தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபகாலமாக தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியைப் பற்றிய பேச்சுத்தான் அதிகமாக உள்ளது. அந்த அளவுக்கு ரசிகர்களிடம் பேராதரவை பெற்று விஜய் டிவி டிஆர்பியை அள்ளித் தந்து கொண்டிருக்கிறது.

தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பைனல் வின்னராகப்போவது நடன இயக்குனர் பாபா பாஸ்கர் தான் என்ற செய்தி விஜய் டிவி வட்டாரங்களிலிருந்து கசிந்துள்ளது.

baba-baskar-cinemapettai
baba-baskar-cinemapettai

முன்னதாக குக் வித் கோமாளி இறுதிச்சுற்றில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், பவித்ரா லட்சுமி, ஷகிலா போன்றோர் இறுதிப் போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதிலிருந்தே யார் இதில் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கருத்து கணிப்பு இணையதளத்தில் தொடங்க ஆரம்பித்தது.

பெரும்பாலும் அஸ்வின் தான் ஜெயிப்பார் என இளம் ரசிகைகள் தங்களது ஓட்டுக்களை வாரி வழங்கி வந்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாபா பாஸ்கர் வெற்றி பெற்றுவிட்டார்.

பாபா பாஸ்கர் சினிமாவில் நடன இயக்குனராகவும் இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். அப்போதெல்லாம் கிடைக்காத வரவேற்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்துள்ளது மீண்டும் சினிமாவில் அவருக்கு செகண்ட் இன்னிங்சை ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News