வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

குக் வித் கோமாளி சீசன்-4 டைட்டில் வின்னர்  யார் தெரியுமா? இதுவரை நடக்காத அதிரடி ட்விஸ்ட்

Cook With Comali Season 4 Title Winner: சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் என்டர்டைன்மென்ட் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இந்த வாரம்  நடைபெறப் போகிறது. ஆனால் இதற்கான ஷூட்டிங்  நிறைவடைந்த நிலையில் முதல் மூன்று இடத்தை பிடித்த போட்டியாளர்களின் விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

ஆனால்  பெரும்பாலானோர் சிவாங்கி தான் டைட்டில் வின்னர் என அடித்துச் சொன்ன நிலையில், தற்போது அதிரடியான ட்விஸ்ட்  ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இதுவரை தொடர்ந்து மூன்று முறையும் பெண்களே டைட்டிலை அடித்த நிலையில், இந்த முறை ஒரு ஆண்மகன்  அதுவும் முரட்டு வில்லன் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகி இதுவரை நடக்காததை நிகழ்த்தியிருக்கிறார்.

Also Read: சின்னத்திரையில் கொடி கட்டி பறக்கும் 10 பிரபலங்கள்.. என்டர்டைன்மென்டில் பிச்சு உதறும் புகழ்

ஏற்கனவே நடந்து முடிந்த முதல் சீசனில் வனிதாவும், 2-வது சீசனில் கனியும், 3-வது சீசனில் ஸ்ருதிகா-வும்  டைட்டிலை வென்ற நிலையில் 4-வது சீசனில் மைம் கோபி முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.2-வது இடத்தில் சிருஷ்டி இருப்பதாகவும், 3-வது இடத்தில் விசித்ரா இருப்பதாகவும் நடுவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

அதேசமயம் பைனலுக்கு சென்ற ஆண்ட்ரியா மற்றும் சிவாங்கி இருவரும் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். கோமாளியாக இருந்து குக்காக மாறிய சிவாங்கி  தான், இந்த சீசனின் டைட்டில் வின்னர் என ரசிகர்கள் கூறிக் கொண்டிருந்த நிலையில், அவரை தேர்வு செய்தால் விஜய் டிவி பாரபட்சம் பார்ப்பது போன்று இருக்கும் என்று கடைசி நேரத்தில் ஆளை மாற்றி விட்டார்களா என்றும்  சிவாங்கி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: குக் வித் கோமாளி பைனல் லிஸ்ட்.. மீண்டும் வேலையை காட்டிய விஜய் டிவி

கடைசியில் சிவாங்கியை கோமாளியாகவே மாற்றி விட்டீர்களே! என்றும்  சோசியல் மீடியாவில் காட்டமாக கருத்துக்களை பதிவிடுகின்றனர். அதேசமயம் மைம் கோபி நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே எல்லா டாஸ்க்களிடம் சிறப்பாக செயல்பட்டதால் அவர் முதலிடத்தைப் பிடித்ததற்கு மறுபுறம் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றனர்.

இவரை பல படங்களில் முரட்டு வில்லனாகவே பார்த்த ரசிகர்களுக்கு  இந்த நிகழ்ச்சியில் ஜாலியான மனிதராக ரசிகர்களால் பார்க்க முடிந்தது.இருப்பினும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் மைம் கோபி  டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்திருப்பது இதுவரை நடக்காத அதிரடி ட்விஸ்ட் என இந்த நிகழ்ச்சியை வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

Also Read: அஸ்வின் போல ஆணவத்தில் ஆடும் யூடியூபர்.. முதல் படத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கும் மஞ்சள் வீரன்

- Advertisement -

Trending News