செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

குக் வித் கோமாளி புகழுக்கு குவியும் பட வாய்ப்புகள்.. வரிசைகட்டி நிற்கும் முன்னணி நடிகர்களின் பட லிஸ்ட்

என்னதான் விஜய் டிவியில் பணியாற்றுபவர்களை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டாலும் உண்மையான திறமைசாலிகளை அடையாளம் காண்பதில் விஜய் டிவியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்பது தான் உண்மை.

அந்த வகையில் விஜய் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சாதித்த பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். அதில் சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். தற்போது அந்த வகையில் குக் வித் கோமாளி புகழும் இடம் பெற்றுள்ளார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விட அதிகமான ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உள்ளனர். சமையல் நிகழ்ச்சியில் காமெடி நட்சத்திரங்களை போட்டு பயங்கர என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர். அதில் புகழ் என்பவருக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

pugazh-cookwithcomali-cinemapettai
pugazh-cookwithcomali-cinemapettai

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது சினிமாவிலும் கால்பதிக்க தொடங்கியுள்ளார் புகழ். அந்த வகையில் முதல் படமே தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 பட வாய்ப்பையும் பெற்றுள்ளார். முன்னதாக மாஸ்டர் படத்தில் புகழ் நடிக்கவிருந்த நிலையில், முடி வெட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மாஸ்டர் படத்தை நிராகரித்து விட்டாராம்.

அதனை தொடர்ந்து அருண்விஜய் நடிக்கும் AV33 படத்தில் முக்கிய காமெடியனாக களமிறங்கியுள்ளார் புகழ். இதனைத் தொடர்ந்து சூர்யா 40 படத்திலும் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இன்னும் சில வருடங்களில் வைகைப்புயல் வடிவேலு இடத்தை புகழ் பிடிப்பார் என நம்பலாம்.

- Advertisement -

Trending News