வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பிரியா பவானி சங்கருக்கு தம்பியாக நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. இது என்ன புது கம்போவா இருக்கு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் உருவாக்கி வந்தனர்.

தற்போது குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. புகழுக்கு எப்படி முதல் சீசனில் ஆதரவு கொடுத்தார்களோ, அதேபோல் தற்போது குக் வித் கோமாளி இரண்டாவது சீசனிலும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். புகழுக்காகவே ஒரு சில ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட வலிமை படத்தில் நடிப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது ஆனால் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் AV 33 என பெயர் சூட்டி உள்ள படத்தில் புகழ் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், ஜெயபாலன், ராதிகா மற்றும் பிரகாஷ்ராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.

priya bhavani shankar
priya bhavani shankar

இப்படத்தில் புகழ் பிரியா பவானி சங்கரின் தம்பியாக நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதாகவும் அதாவது விஜய் டிவியில் பிரபலமான தன் மூலம் சினிமாவிற்குள் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

av-33-pugazh
av-33-pugazh
- Advertisement -

Trending News