வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

17 இலட்சத்திற்கு கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்.. கார் துடைத்தவர் விடா முயற்சியால் ஓனரான சுவாரஸ்யம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் புகழ். ஆரம்பத்தில் காமெடி ஷோக்களில் நகைச்சுவை செய்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

என்னதான் விஜய் டிவியில் உள்ள நட்சத்திரங்கள் வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து விஜய் டிவியை கிண்டல் செய்தாலும் உண்மையான திறமைகளைக் கண்டெடுப்பதில் விஜய் டிவிக்கு நிகர் விஜய் டிவிதான்.

விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு சென்று சாதித்தவர்கள் நிறைய பேர் உண்டு. சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றோர் கூட விஜய் டிவியால் கண்டெடுக்கப்பட்ட முத்துக்கள் தான். சமீபகாலமாக ரோபோ சங்கர் இல்லாத படமே கிடையாது என்ற அளவுக்கு காமெடி நடிகராக வலம்வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியால் அடுத்த கட்டத்திற்கு சென்றிருப்பவர்தான் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய காமெடி திறமையை காட்டி மொத்த மக்களையும் கவர்ந்தார்.

இதனால் அவருக்கு பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அஜித்தின் வலிமை, விஜய்யின் தளபதி 65, சிவகார்த்திகேயனின் டான், அருண் விஜய்யின் AV33 உட்பட பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு கார் துடைக்கும் வேலைக்குச் சென்ற புகழ், தற்போது 17 லட்சம் மதிப்புள்ள புதிய காரை சொந்தமாக வாங்கிய புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

pugazh-cinemapettai
pugazh-cinemapettai
- Advertisement -

Trending News