அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பல காமெடி நடிகர்களும் தங்களது சரியான கதை அமையும்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இவ்வளவு ஏன் வடிவேலு, விவேக், கவுண்டமணி, நாகேஷ் போன்ற பல நட்சத்திரங்களும் தங்களுடைய திறமைக்கு ஏற்ப நல்ல நல்ல படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடம் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
அந்த வகையில் அடுத்ததாக ஹீரோவாகி உள்ளவர் காமெடி நடிகர் சதீஷ். சமீபகாலமாக சதீஷ் காமெடி நடிகரா, அல்லது துணை நடிகரா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. அதற்கு காரணம் அவரது நடிப்பில் காமெடி இல்லை என்பதே. அதுவும் கடந்த சில படங்களில் சதீஷ் செய்யும் காமெடிகளுக்கு சுத்தமாக சிரிப்பை வருவதில்லை. இருந்தாலும் அவரை காமெடியனாக வைத்து பலரும் படங்கள் எடுத்து வருகின்றனர்.
தற்போது அதிலும் ஒருவர் அனைவரையும் ஓவர்டேக் செய்து படம் எடுத்தால் சதீசை ஹீரோவாக வைத்து தான் வைத்து எடுப்பேன் என சபதம் எடுத்து வந்துள்ளார் இயக்குனர். அதிலும் இந்தப் படத்தைத் தயாரிக்கப்போவது விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான்.
இந்நிலையில் சதீஷ்க்கு ஜோடியாக நடிக்க உள்ளது சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள பவித்ரா லட்சுமி என்பவர் தான்.
பவித்ராவுக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது கண்டிப்பாக முன்னணி இளம் நடிகர் யாராவதுடன் ஜோடி சேருவார் என எதிர்பார்த்த நிலையில் கடைசியில் காமெடி நடிகருக்கு ஜோடியாக தான் வாய்ப்பு கிடைத்துள்ளது போல. இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.