திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்.. அடுத்த 2 வாரங்களுக்கு அவுட், அவங்க இல்லன்னா ஒண்ணுமே இல்லயே!

பிரபல டிவி சேனலில் ஆன்கராக வேலை பார்த்து பிரபலமானவர் மணிமேகலை. சன் மியூசிக் தொலைக்காட்சியில் கடந்த 2010ஆம் ஆண்டு சூப்பர் ஹிட்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.

இதன் மூலம் தான் மணிமேகலை பிரபலமானார், இவரது கணவரும் ஒரு நடன இயக்குனர். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் ஒரு சில கலாட்டா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

மணிமேகலை தற்போது விஜய் டிவியில் ட்ரெண்டிங்கில் இருக்கும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தற்போது சுட சுட வெந்நீர் பட்டதால் விபத்தில் சிக்கி உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விபத்தினால் அடுத்த இரண்டு வாரங்களில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டேன், முக்கியமான நிகழ்ச்சியில் என்னை பார்க்க முடியாது என்பது போட்ட பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை, ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை என்பதையும் தெரிவித்துள்ளார்.

manimegalai-vijay-tv
manimegalai-vijay-tv

மணிமேகலை விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

Trending News