விஜய்க்காக த்ரிஷா செய்த அந்த விஷயம்.. கோட் படத்தால் வெடிக்கப் போகும் சர்ச்சை

Vijay: விஜய், திரிஷா பற்றிய சர்ச்சைகள் தான் இப்போது மீடியாவை சுற்றிக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு விஜய் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அதற்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் திரிஷா போட்ட ஒரு போட்டோ தான் சர்ச்சைகளுக்கு காரணமாக இருக்கிறது. ஏற்கனவே இவர்கள் இருவரை பற்றிய கிசுகிசு செய்திகள் அதிர்வலையை கிளப்பி வருகிறது.

விஜய் தன் மனைவியை பிரிந்ததற்கு கூட இவர்தான் காரணம் என பேசுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் அந்த போட்டோவை வெளியிட்டதோடு அதில் வைத்திருந்த பாடல் தான் பஞ்சாயத்தாக மாறி இருக்கிறது.

அதில் உன்னை காதலிக்கிறேன் இறக்கும் வரையிலும் உன் மீது காதல் இருக்கும் என சில வரிகள் இடம்பெற்று இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது கோட் படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார் என்ற தகவலும் கசிந்து உள்ளது.

கோட் படத்தில் திரிஷா

இதைப் பற்றி கூறியிருக்கும் பயில்வான் ரங்கநாதன் திரிஷா இப்படி ஒரு பாடலுக்கெல்லாம் ஆடியதே கிடையாது. ஆனால் இதில் விஜய் கேட்டுக் கொண்டதற்காக அவர் தன் கொள்கையை விட்டு இறங்கி வந்திருக்கிறார்.

அந்த அளவுக்கு இருவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. விஜய் அரசியல் களத்தில் குதித்து விட்டதால் இருவரையும் இணைத்து தவறாக பேசுகிறார்கள். இதெல்லாம் ஒரு அரசியல் தான் என தெரிவித்துள்ளார்.

ஆனால் ஏற்கனவே ஒரு சர்ச்சை தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதில் எண்ணெய் ஊற்றிய கதையாக கோட் படத்தில் திரிஷாவை ஏன் ஆடவைக்க வேண்டும் என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

எது எப்படியோ அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணம். இதையெல்லாம் விஜய் நிச்சயம் எதிர்பார்த்து இருப்பார். அதை சமாளிக்கும் வழியும் அவருக்கு தெரியும். விரைவில் இதற்கெல்லாம் அவர் முடிவு கட்டிவிடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கொழுந்துவிட்டு எரியும் விஜய், த்ரிஷா விவகாரம்

Next Story

- Advertisement -