பூதாகரமாக வெடித்து சாய்பல்லவியின் பேச்சு.. வளர வளர பிரச்சினை வரத்தான் செய்யும்

தமிழ், தெலுங்கு, மலையாள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. கடந்த இரண்டு நாட்களாக இணையம் முழுவதும் இவரது பேச்சு தான். அதாவது சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் விரத பர்வம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக சாய்பல்லவி மற்றும் படக்குழுவினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு சாய் பல்லவி பேட்டி கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது இப்படத்தில் சாய்பல்லவி நக்சலைட் ஆக நடித்துள்ளார். இதைப்பற்றி அந்த பேட்டில் கேட்கும்போது, சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதாகக் காட்டியிருப்பார்கள்.

அதேசமயம் கொரோனா காலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்களை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லித் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கும் காஷ்மீரில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம். இரண்டுமே ஒன்றுதான் என சாய்பல்லவி கருத்து தெரிவித்தார்.

பசு பாதுகாவலர்களையும், காஷ்மீரி தீவிரவாதிகளையும் சாய் பல்லவி ஒப்பிட்டு பேசியுள்ளார் என்று இந்த செய்தி சர்ச்சையாக வெடித்தது. இதனால் சாய்பல்லவிக்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். தற்போது சாய்பல்லவி சினிமாவில் வளர்ந்து வரும் நிலையில் சர்ச்சையை கிளப் போவதற்காக இவ்வாறு சிலர் பிரச்சினை செய்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகை ரம்யா கருத்து தெரிவித்துள்ளார். அதாவது சாய்பல்லவிக்கு மிரட்டல் விடுவதை நிறுத்த வேண்டும், ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்லும் உரிமை உண்டு. நல்ல மனிதர்களாக இருங்கள் என்று சொன்னால் உடனே தேச துரோகி என முத்திரை குத்தி விடுவீர்களா. உண்மையை உரக்கச் சொன்ன சாய்பல்லவிக்கு எனது பாராட்டுக்கள் என ரம்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

- Advertisement -