ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

2.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சித்ராவின் கடைசி வீடியோ.. கண் கலங்கும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் நன்கு பிரபலம் அடைந்தவர் விஜே சித்ரா. இந்த சீரியலில் இவர் நடித்த முல்லை கதாபாத்திரம் இவருக்கு ஒரு அங்கீகாரமாகவே கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

சித்ரா என்று கூறுவதைவிட அனைவரும் முல்லை என்றல் தான் தெரியும். அந்த அளவிற்கு முல்லை கதாபாத்திரம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது.

சமீபத்தில் நட்சத்திர ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார், மேலும் இவரது தற்கொலைக்கு அவரது கணவர் காரணமாக இருக்கலாம் என போலீசார் ஹேமந்த் என்பவரை கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் சித்ரா குடும்பத்தினருடனும் ,ஹேமந்த் குடும்பத்தினருடனும் சித்ரா உடன் பணியாற்றிய சக நடிகர்களுடனும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இன்னும் சித்ராவின் கொலைக்கு யார் தான் காரணம் என்பது போலீசார் தரப்பில்லிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரா கடைசியாக நடித்த இருசக்கர வாகனம் சம்பந்தப்பட்ட விளம்பரம் வீடியோ 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Trending News